சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்கப்படுமா? சட்டமன்றத்தில் அமைச்சர் ரகுபதி பதில்

viduthalai
2 Min Read

சென்னை, ஜூன் 25- தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று (24.6.2024) காங்கிரஸ் உறுப்பினர் துரை சந்திர சேகர் (பொன்னேரி) செய்தி மற்றும் விளம்பரத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங் கேற்று பேசுகையில், ‘உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இதற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதி லளித்துக் கூறியதாவது:-

உச்ச நீதிமன்றத்தின் கிளையை வெளியே டில்லிக்கு கொல்கத்தா, மும்பை, சென்னை ஆகிய இடங்களில் அமைக்க வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வை டில்லியில் அமைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும். பிரதமருக்கும் கடந்த 2022இல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

அந்த கடிதத்திற்கு பதில் அளித்த ஒன்றிய சட்ட அமைச்சர் உச்ச நீதிமன்றத்தின் கிளையை நாட்டின் பல்வேறு பகுதியில் அமைக்க வேண்டும் என்றும், அரசியல் சாசன அமர்வை டில்லியில் அமைக்கவேண்டும் என்றும் பல்வேறு கோரிக் கைகள் வந்துள்ளன.

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் உள்ளது. அதில் வரும் தீர்ப்பை பொறுத்துதான் முடிவு செய்ய முடியும். காத்திருக்கிறோம். தீர்ப்புக்கு பிறகு மற்ற விஷயங்கள் முடிவு செய்யப்படும்.

– இவ்வாறு அவர் பதிலளித்தார்.

கைதிகள், குழந்தைகளை காண தனி அறை

பின்னர் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணி கள் துறையின் புதிய அறிவிப்புகளை அமைச்சர் ரகுபதி வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:

* புழல் சிறையில் கூடுதலாக 1,000 கைதிகளை அனுமதிக்கும் வகையில் கூடுதல் தளம் கட்டடம் கட்டப்படும். மேலும் பார் வையாளர்கள் காத்திருப்பு அறை கட்டப்படும்.

* 9 மத்திய சிறை கள், 5 பெண்கள் தனிச் சிறை, 14 மாவட்ட சிறை கள், பூவிருந்தவல்லி தனி கிளைச்சிறை மற்றும் சிறைத்துறை தலைமையகம் ஆகிய இடங்களில் 160 காணொலி காட்சி அமைப்புகள் ஏற்படுத் தப்படும்.

* சிறைச்சாலைகளில் கைதிகள் தங்கள் குழந்தை களை அருகில் சந்திக்க ஏதுவாக 9 மத்திய சிறை கள் மற்றும் 5 பெண்கள் சிறைகளில் தனி அறைகள் அமைக்கப்படும்.

சட்டக்கல்லூரிகளில் கூடுதலாக மாணவர் சேர்க்கை

* பட்டறைப்பெரும் புதூர் மற்றும் புதுப்பாக்கத் தில் செயல்பட்டு வரும் அரசு சட்டக்கல்லூரிகளில் 2024-2025ஆம் ஆண்டு முதல் தொடங்கப்படும்.

* 6 அரசு சட்டக் கல்லூரிகளில் 5 மற்றும் 3 ஆண்டு சட்டப் படிப்புகளில் தலா 40 மாணவர்கள் வீதம் மொத்தம் 480 மாண வர்கள் கூடுதலாக அனு மதிக்கப்படுவர்.

* அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் வள மேலாண்மை திட்டம் உரு வாக்கப்படும்.

அரசு சட்டக்கல்லூரி மாணவர்களின் தொழில் திறன் அதிகரிக்க பயிற்சிப் பேராசிரியர் என்ற சிறப்பு திட்டம் நடை முறைப்படுத்தப்படும்.
அரசு சட்டக் கல்லூரி களில் சட்டத் தமிழ் என்ற புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

சீர்மிகு சட்டப் பள்ளியில் புதிதாக 2 முது கலை படிப்புகள் அறிமுகம் செயப்படும். மேலும் அங்கு மாணவர் மற்றும் ஆசிரியர் பரிமாற்ற திட்டம் செயல்படுத்தப்படும்.

– இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *