புதுடில்லி, ஆக. 26 – மணிப்பூர் பாலியல் வன்கொடுமை வழக்குகளை அசாம் மாநிலத்திற்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையை மேற்கொள்வதற்கான நீதிபதியை நியமிக்குமாறு, கவுகாத்தி உயர்நீதி மன்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிபிஅய் விசாரித்து வரும் 21 வழக்குகளும் அசாம் மாநிலத்திறகு மாற்றப்பட்டுள்ளது. வழக்கில் நியாயமான விசாரணையை உறுதி செய்ய வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ள தாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மணிபூர் பாலியல் வன்கொடுமை
மணிப்பூரில் இரு சமூகங் களுக்கிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. கிட்டத் தட்ட மூன்று மாத காலம் நீடித்த இந்த வன்முறையில் 160க்கும் மேற் பட்டோர் பலியாகி உள்ளனர்.
உயிருக்குப் பயந்து ஏராளமா னோர் ஊரை காலி செய்து வேறு மாநிலங்களுக்கு சென்றுவிட்ட னர். உள் கட்டமைப்புகள் கடுமை யாக சேதமடைந்துள்ள நிலையில், தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.
இந்த வன்முறை உச்சத்தில் இருந்தபோது நடந்த பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக இரண்டு பெண்களை ஆடையின்றி மானபங்கம் செய்த படி ஊருக்குள் இழுத்து வந்தது தொடர்பான காட்சிப் பதிவுகள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.
இதையடுத்து மணிப்பூரில் பெண்களை ஆடையின்றி இழுத் துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வழக்கை சிபிஅய் விசாரித்து வருகிறது.