சென்னை, ஜூன் 24- வங்கிகளில் வைப்பு நிதிக்கு 9.50 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள் குறித்த விவரங்களை ரெப்போ வட்டி விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்தது.
வங்கிகள் சமீபத்தில் தனது வைப்பு டெபாசிட் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளன.
பொதுக் குடிமக்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்களை விட வங்கிகள் வைப்பு நிதி தொகையில், மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
இந்த வட்டி விகிதங் கள் வங்கியைப் பொறுத்து 0.50% முதல் 0.75% வரை மாறுபடும். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற சில பெரிய வங்கிகள், குறிப்பிட்ட காலத்திற்கு மூத்த குடி மக்களுக்கு அதிக வட்டி விகிதங்களுடன் சிறப்பு நிலையான வைப்புகளை வழங்குகின்றன.
கனரா வங்கி
கனரா வங்கி ரூ.3 கோடிக்கும் குறைவான தொகைகளுக்கு 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான கால வைப்பு நிதிக்கு வங்கி 4% முதல் 7.75% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. அதிகபட்ச வட்டி விகிதம் 7.75% 444 நாள்கள் வைப்புகளுக்கு வழங்கப்படுகிறது. இந்தப் புதிய வட்டி விகிதங்கள் ஜூன் 11, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.
ஆக்ஸிஸ் வங்கி
ஆக்ஸிஸ் வங்கி ரூ.3 கோடிக் கும் குறைவான வைப்புத் தொகைகளுக்கு 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான தவணைக் காலங்களில் 3.50% முதல் 7.85% வரை வட்டி விகிதங் களை வங்கி வழங்குகிறது.
அதிகபட்ச வட்டி விகிதம் 7.85% 17 மாதங்கள் முதல் 18 மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கு வழங்கப்படுகிறது. புதிய வட்டி விகிதங்கள் ஜூன் 19, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.
நார்த் ஈஸ்ட் ஸ்மால்
ஃபைனான்ஸ் வங்கி
நார்த் ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ரூ.3 கோடிக் கும் குறைவான தொகைகளுக்கு 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலப்பகுதிகளில் 3.75% முதல் 9.50% வரை வட்டி விகிதங்களை வங்கி வழங்கு கிறது.
546 – 1111 நாட்களுக்கு அதிகபட்ச வட்டி விகிதம் 9.50% வழங்கப்படுகிறது. புதிய வட்டி விகிதங்கள் ஜூன் 7, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
ஹெச்.டி.எஃப்.சி வங்கி ரூ.3 கோடிக்கும் குறைவான தொகைகளுக்கு 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான தவணைக் காலங்களில் 3.50% முதல் 7.75% வரை வட்டி விகிதங் களை வங்கி வழங்குகிறது.
அதிகபட்ச வட்டி விகிதம் 7.75% 18 மாதங்கள் முதல் 21 மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கு வழங்கப்படுகிறது. புதிய வட்டி விகிதங்கள் ஜூன் 19, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.
உத்கர்ஷ் ஸ்மால்
ஃபைனான்ஸ் வங்கி
உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ரூ. 3 கோடிக்கும் குறைவான தொகைகளுக்கு 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான தவணைக்காலங்களில் 4.60% முதல் 9.10% வரை வட்டி விகிதங்களை வங்கி வழங்குகிறது. அதிகபட்ச வட்டி விகிதம் 9.10% 1500 நாள்களுக்கு வழங்கப்படுகிறது. புதிய வட்டி விகிதங்கள் ஜூன் 7, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.