சென்னை, ஜூன் 24- சென்னை தீவுத்திடலில் நிரந்தர கண்காட்சிக்கூடம் அமைக்கப் பட உள்ளது. இதற்கான நட வடிக்கைகளை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டின் முக்கிய நகரமாக சென்னை திகழ்கிறது. இங்கு உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் போக்குவரத்து உள்ளிட்டவைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இவை மட்டுமல்லாமல், புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளையும் கொண்டு வர வேண்டிய தேவை உள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நகரின் தேவைக்கு ஏற்றவாறு புதிய திட்டங்களை உருவாக்க வேண்டியுள்ளது.
சென்னை மாநகருக்கு தேவையான இத்தகைய வளர்ச்சித் திட்டங்களை சி.எம்.டி.ஏ., எனப் படும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் படிப்படியாக செயல்படுத்தி வருகிறது. சென்னை தீவுத்திடலில் ஆண்டு தோறும், அரசு சார்பில் குறிப்பிட்ட நாட்களில் பொருட்காட்சி நடத்தப் படுவது வழக்கம்.
சென்னை மக்களின் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக தீவுத்திடல் பொருட்காட்சி திகழ்கிறது.
சிறுவர்களுக்கான பொழு துபோக்கு அம்சங்கள், விளை யாட்டுகள், பல வகையான உணவு கள், கேளிக்கை அம்சங் கள் என ஒரே இடத்தில் அனைத்தையும் காண முடியும். இந்நிலையில் சென்னை தீவுத்திடலில் பொழுதுபோக்கு மய்யம் ரூ. 50 கோடியில் அமைக்கப் படும் என 2023 – 2024ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக் கப்பட்டிருந்தது.
இதற்காக தீவுத் திடலில் 30 ஏக்கர் நிலத்தை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக் கப்பட்டது. தீவுத்திடலுக்கான புதிய திட்டம் தயாரிக்கப்பட்டது.
ரூ. 50 கோடி நிதி அறிவிக்கப் பட்ட நிலையில், தற்போது திட் டத்தின் மதிப்பீடு ரூ.104 கோடியாக அதிகரித்துள்ளது. தீவுத்திடலில் அதற்கான கட்டு மானப் பணி களை மேற்கொள்வ தற்கு, ஒப்பந்த தாரர்களை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கி யுள்ளதாக சி.எம்.டி.ஏ அதிகாரிகள் தகவல் தெரி வித்துள்ளனர்.
இங்கு நிரந்தர கண்காட்சி வளாகம், கடைகள் அமைக்க 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. 400 கடைகள் கட்டப்பட உள்ளன. மேலும் சிப்பி வடிவில் நிரந்தர கண்காட்சிக் கூடம் கட்டப்பட உள்ளது.