லக்னோ, ஆக. 26 உத்தரப்பிரதேசத் தில் கால்வாயில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பக்தர்கள் உயிரிழிந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள ரெதிபோட்கி என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் பலர் ரண்டால் கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொள்வ தற்காக டிராக்டரில் புறப் பட்டனர்.
டிராக்டரில் பெண்கள், சிறு வர்கள் உள்பட சுமார் 50 பேர் இருந்தனர். தாஜ்புரா என்ற கிராமத்துக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, டிராக்டர் திடீரென ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்தது. இதனால் சாலையில் தறிக்கெட்டு ஓடிய டிராக்டர் சாலையோரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்தது. அப்போது கால்வாயில் நீரோட்டம் வேகமாக இருந்ததால் பலர் அடித்து செல் லப்பட்டனர்.
இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். 23.8.2023 அன்று மாலை கால் வாயில் இருந்து 4 உடல்கள் மீட் கப்பட்ட நிலையில், தொடர்ந்து விடியவிடிய மீட்பு பணிகள் நடந்தன. இந்த நிலையில் 24.8.2023 அன்று காலை கால்வாயில் இருந்து மேலும் 4 உடல்கள் மீட் கப்பட்டன. இதன் மூலம் பலி எண்ணிக்கை 9 ஆனது. உயிரிழந்த 9 பேரில் 4 பேர் சிறுவர்கள் ஆவர். இந்த விபத்தில் மேலும் சிலர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே டிராக்டரில் பயணித்த கிராம மக்கள் கால்வாய் இருக்கும் பகுதி வழியாக செல்ல வேண்டாம் என ஓட்டுநரை எச்சரித்ததாகவும், அதை புறக் கணித்துவிட்டு ஓட்டுநர் அந்த வழியாக சென்றபோது விபத்து நேரிட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் திருவிழாவில் கலந்து கொள்வ தற்காக சென்றவர்கள் கால்வாயில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.