தஞ்சை மாவட்டம், அம்மாப் பேட்டை ஒன்றியச் செயலாளர் பெரியார் பெருந்தொண்டர் செ.காத்தையன் (வயது-74) இன்று (24.6.2024) காலை 11 மணியளவில் உடல் நலக்குறைவால் அவரது இல்லத்தில் மறைவுற்றார்.
இவரது இறுதி நிகழ்வு நாளை (25.6.2024) காலை 10-மணிக்கு அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு உடலடக்கம் செய்யப்படும்.
இவர் தனது இளம் பருவத்தில் இயக்கத்தில் இணைந்து பணியாற்றியவர்… இயக்கம் நடத்திய அனைத்துப் போராட்டம், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்.. இயக்க மாநாடுகளுக்கு தனது வாழ்க்கைத் துணைவியார் தனலெட்சுமி, மகன்கள் பொறியாளர்கள் கா.பிரபாகரன், கா.இமயவரம்பன் ஆகியோருடன் கலந்து கொண்டவர்.
தொடர்புக்கு: மகன்கள்: கா.பிரபாகரன் 95909 16298, கா.இமயவரம்பன் 9611656508