மேனாள் லால்குடி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர், மண்ணச்சநல்லூர் ‘உடுக்கடி’ அட்டலிங்கம் அவர்கள் சிறு விபத்து காரணமாக தமது 93ஆம் வயதில் நேற்று (22.6.2024) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
கைத் தொழில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப்பின் முழு நேரக் கழகப் பணியில் ஈடுபட்டு வந்தவர். தமிழ்நாடு தழுவிய அளவில் சென்று உடுக்கடி மூலம் இயக்கப் பிரச்சாரம் செய்து வந்தவர்.
தன்னுடைய மகன்களுக்கு தமிழரசு, பகுத்தறிவாளன், விடுதலை என்று பெயர் சூட்டியிருந்தார். கழக மேடையில் கழகத் தலைவர் ஆசிரியர் முன்னிலையில் தனது வாழ்விணையருக்கு தாலி நீக்கம் செய்த கொள்கையாளர்.
கழகக் காப்பாளரான உடுக்கடி அட்டலிங்கம் மறைவு அந்த வட்டாரத்தில் கழகத்திற்கு ஏற்பட்ட பெரும் இழப்பாகும். அவர் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கும், கழகத் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
23.6.2024
தொடர்புக்கு: தமிழரசு 9677849319