பெரியார் மருந்தியல் கல்லூரியில் உயர் இரத்த அழுத்த நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

Viduthalai
1 Min Read

திருச்சி, ஜூன் 23 திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்க லைக்கழகத்தின் துணைவேந்தர் மருத்து வர் கே. நாராயணசாமி அவர்களின் அறிவுறுத்தலின்படி உயர் இரத்த அழுத்த நாள் குறித்த விழிப்புணர்வு நிகடிநச்சிகள் 07.06.2024 முதல் 15.06.2024 வரை நடைபெற்றது.

உயர் இரத்த அழுத்த பரிசோதனை மாபெரும் முகாம்
பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமையில் மாபெரும் உயர் இரத்த அழுத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும்பொ துமக்கள் என 3246 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

துண்டறிக்கைகளை பொதுமக்களுக்கு வழங்குதல்
மேலும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள், அதற்கான தீர்வுகள் உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சிகள் குறித்த துண்ட றிக்கைகளை நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பொதுமக்களுக்கு வழங்கி அது தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர்.

சிறந்த வாசகத்துக்கான போட்டி
அதுமட்டுமல்லாமல் உயர் இரத்த அழுத்தம் குறித்து விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகையில் மாண வர்களுக்கான சிறந்த வாசகத்துக்கான போட்டி 14.06.2024 அன்று நடைபெற்றது. 40க்கும் மேற்பட்ட வாசங்களை சமர்ப்பித்த மாணவர்களில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

வினாடி வினா போட்டி
உயர் இரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக மாணவர்களுக்கான வினாடி –வினாப்போட்டி நடைபெற்றது. அய்ந்து குழுக்களாக நடைபெற்ற இப்போட்டியில் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்ப டுத்தும் மருந்துகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்த பல வினாக்கள் இடம்பெற்றிருந்தன. இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு நாட்டு நலப்பணித்திட்டத்தின் மூலம் பரிசுகள் வழங்கப்பட்டது.

நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் அ. ஜெசிமா பேகம் கூறுகையில் ஒருங்கிணைத்த இப்பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் சுமார் 4000க்கும் மேற்பட்டோர் உயர் இரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை பெற்று பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது என்றார்,

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *