கள்ளக்குறிச்சி, ஜூன் 23 – கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரி ழந்தவர்களின் குடும்பத்தினரை தேசிய பட்டியலின ஆணையத்தின் இயக்குனர் ரவிவர்மன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் செய்ய வேண்டிய அனைத்து உதவிகளும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து செய்தி யாளர்களை சந்தித்த ஆணையத்தின் தலைவர் ரவிவர்மன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தி னர் நிலைகுலைந்து இருப்பார்கள் அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
கள்ளச்சாராய விற்பனையின் பின்னணியில் உள்ளவர் யார் என்பதை கண்டறிந்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வது குறித்தும் ஒன்றிய அரசிற்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார். பட்டியலின மக்கள் படிப்பறிவு இல்லாததால் இந்த சாராயத்தில் மெத்தனால் கலந்திருப்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கள்ளச்சாராய விற்பனையை நிரந்தர மாக தடுக்க புது சட்டங்களை தான் இயற்ற வேண்டும் மற்றும் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் தான் இந்த கள்ளச்சாராய விற்பனையை தடுக்க முடியும் என்றும், உடல் வலிக்கு கள்ளச்சாராயம் தான் மருந்து என மக்கள் நினைத்து வருவதாகவும், அதனை மனமாற்றம் செய்து வானொலி மூலமாக அல்லது தொலைக்காட்சி மூலமாகவோ உடல்வலிக்கு மருத்துவமனைகளில் மருந்து உள்ளது என்பதை அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நோய்க்கு தீர்வு மருந்து தானே தவிர சாராயம் இல்லை என்றும், இளைஞர்கள் பலர் சாராயம் அருந்தி இருப்பது வருந்தத் தக்க செயலாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.