பட்டியல் ஜாதிகள், பழங்குடி வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினர் தேசிய ஒன்றியத்தின் (National Union for the Scheduled Castes, the Scheduled Tribes, Other Backward Classe and Minorities – NUBE) தேசிய தலைவர் எஸ்.கீதா அவர்கள், சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவரை சந்தித்து உரையாடினார். அண்மையில் டில்லியில் NUBE நடத்திய டில்லியின் முதலாவது முதலமைச்சரும், சமூகநீதித் தலைவருமான பிரம் பிரகாஷ் அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கு தமிழர் தலைவர் வாழ்த்து அனுப்பியமைக்கு நன்றி பாராட்டினார்; விழா மலரினையும், நினைவுப் பரிசினையும் வழங்கினார். உடன்: ஒன்றியத்தின் துணைத் தலைவர் முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ், தென் மண்டல தலைவர் ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் இலட்சுமணன் ஆகியோர் இருந்தனர். (சென்னை, 21.6.2024)
NUBE – தேசிய தலைவர் எஸ்.கீதா மற்றும் பொறுப்பாளர்கள் தமிழர் தலைவருக்கு நன்றி!
1 Min Read
		
			விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர,  உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும். 
			தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
			Leave a Comment
	
Popular Posts
				10% Discount on all books
							
			
