சென்னை, ஜூன் 23- சட்டப் பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தொழிலாளர்களைத் தேடி மருத்து வம், குழந்தையின்மைக்கான சிறப்பு சிகிச்சை, புற்றுநோய்க்கான சிறப்பு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று குறிப்பிட்டார்.
இதுகுறித்து மருத்துவம் மற் றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தில் அளித்த பதில் வருமாறு:–
தொற்றா நோய்களுக்கான சேவைகள் வழங்குவதில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் நோக்கில் தொற்றா நோய்களுக்கான சேவைகளை பயனாளிகளின் இல்லங்களுக்கே தேடிச் சென்று அளிக்கும் வகையில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களின் சீரிய திட்டங்களில் ஒன்றான “மக்களைத் தேடி மருத்துவம்” என்கின்ற திட்டம் 05.08.2021 அன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
‘மக்களைத் தேடி மருத்துவத் திட்ட’த்தின் களப் பணியாளர்கள் இல்லங்களுக்கே சென்று தொற்றா நோய் பரிசோதனைகளை வழங்கும் நேரத்தில் தொழிற்சாலைகளில் பணி புரியும் பெரும்பாலான மக்கள் வேலைக்கு செல்வதால் அவர்கள் இச்சேவைகள் கிடைக்காமல் விடு படுகின்றனர் என்பது கண்டறியப் பட்டது.
இந்த வகையில், முதலமைச்சர் அவர்கள் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் தொழிலாளர்களின் நலனில் தனி அக்கறை கொண்டு தொழிற்சாலைகளிலும் கட்டுமானம் உள்ளிட்ட அமைப்புசாரா தொழில்களிலும் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தொற்றா நோய்க ளினால் பாதிக்கப்படுவதைத் தடுக் கும் பொருட்டு சிறப்பு முயற்சியாக தொழிலாளர்களைத் தேடி மருத்து வத் திட்டம் எனும் தொற்றா நோய்க ளுக்கான திட்டம் ஒன்றை 09.01.2024 அன்று திருவள்ளுரில் இருக்கின்ற Hyundai Mobis Plantஇல் தொடங்கி வைக்கப்பட்டது.
அந்தத் திட்டத்தில் இதுவரை 711 தொழிற்சாலைகளிலுள்ள 8.35 இலட்சம் தொழிலாளர்களுக்கு அந்த திட்டம் பயன்படுகின்றவகையில், ஊரக நலப்பணிகள் இயக்ககம் மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் (Directorate of Industrial Safety and Health) என்கிற அமைப்புகளோடு சேர்ந்து உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற தொற்றா நோய்களுக்கான பரிசோதனை முகாம்கள் அந்தந்த தொழிற்சாலைகளிலேயே நடத்தப் பட்டு வருகிறது.
இத்திட்டத்தால் புலம்பெயர் தொழிலாளர்களும் பயனடைந்து வருகின்றார்கள் என்பதைத் தங்க ளின் மேலான கவனத்திற்குத் தெரி வித்துக் கொள்கிறேன்.
இத்திட்டத்தின் மூலம் 10.06.2024 வரை 476 தொழிற்சாலைகளில் 2,87,114 நபர்களுக்கு தொற்றா நோய்களுக்கான உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களுக்கான பரிசோதனை செய்யப்பட்டதில் 25,075 பேர் புதிதாக தொற்றா நோய்களுக்கான சாத்தியக்கூறு உள்ளவர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர்.
மேலும், ஏற்கெனவே தொற்றா நோய் பாதிப்புள்ளவர்கள் 11,062 நபர் கள் எனவும் தொற்றா நோய்களான உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் பாதிப்பு இல்லாதவர்கள் 2,50,977 எனவும் கண்டறியப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் அம்பத்தூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் கோரியிருப்பதைப் போல சென்னை மாநகராட்சியிலுள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டைப் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட பெரிய தொழிற்சாலைகளும், சிறிய தொழிற்சாலைகளும் இருக் கிறது. அதோடு மட்டுமல்ல, இன்றைக்கு கிண்டி, திருமுடி வாக்கம் போன்ற பல்வேறு பகுதி களிலும் குறு, சிறு தொழில்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அங்கேயெல்லாம் இத்திட்டத்தை விரிவாக்கம் செய்து அவர்களுக்கும் இந்தப் பரிசோதனைகளை மேற் கொள்ள முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள். அந்தப் பணியும் விரைவில் நடை பெறவிருக்கிறது.
குழந்தையின்மைக்கான சிகிச்சை
தமிழ்நாட்டில் இருக்கிற வட்டார பொது மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைகளில் மகப்பேறுவிற்காக வருகிற தாய்மார்களுக்கு Counselling திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறது. இருந்தாலும் உறுப்பினர் சொல்லியிருப்பது போல அதில் சிறப்பு கவனம் செலுத்தி, இன்னமும் அதை கூடுதலாக்கும் முயற்சியை துறை மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மொடக்குறிச்சி தொகுதி ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்துதல்
மொடக்குறிச்சித் தொகுதியில் இருக்கின்ற மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை 15ஆவது நிதி ஆணை யத்தின் ஆதாரம் கொண்டு, பணிகள் தொடங்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறுது. விரைவில் அந்தப் பணிகள் தொடங் கப்படும்.
புற்றுநோய்கான சிறப்பு சிகிச்சை
புற்றுநோயைப் பொறுத்தவரை யில், இன்றைக்கு உலகத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கிற நோய்களில் ஒன்றாகவே இருந்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தான் முதலமைச்சர் அவர்கள், இந்த அரசு பொறுப்பேற்பதற்கு முன்பு வரை தமிழ்நாட்டில் இருந்து புற்றுநோய் ஆராய்ச்சி கருவி PET-CT Scan கருவி இரண்டு இடங்களில் மட்டுமே இருந்தது, இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு இரண்டு இடங்களில் மட் டுமே இருந்த PET-CT Scan கருவி நாகர்கோவில், தஞ்சாவூர், சேலம், கோவை, காஞ்சிபுரம், இப்போது 7 இடங்களில் வைக்கப்பட்டிருக்கிறது.
அதோடு மட்டுமல்ல, முதலமைச் சர் அவர்களிடத்தில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. நான்கு, அய்ந்து குறிப்பிட்ட மாவட்டங்களில் புற்றுநோய்க்கான அறிகுறிகள் அதிகரித்து வருகிற நிலையில் அவர்களுக்கு முழுமையாக பரி சோதனை அந்த மக்களுக்கு செய்து, தொடக்க நிலையிலேயே புற்று நோயை கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
அந்த வகையில் முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஈரோட்டில் அந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு, ஈரோடு, கன்னியாகுமரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் இருக்கிற மக்க ளுக்கு முழுமையாக புற்றுநோய் குறித்த பரிசோதனைகள் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்தத் திட்டத்தை மேலும் தமிழ் நாடு முழுவதிலும் விரைவுப்படுத்துவ தற்கான அந்தச் செயல், இந்த அரசிடம் இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-இவ்வாறு பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்தார்.