சென்னை, ஜூன் 23- சென்னையில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் வீராணம் ஏரி இந்த ஆண்டில் முதன்முறையாக அதன் முழுக் கொள்ளவை எட்டியது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள வீராணம் ஏரி அதன் முழுக் கொள்ளளவான 47.50 கன அடியை எட்டியது. தொடர்ந்து கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீரும் நிறுத்தப்பட உள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 72 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.