வரி விதிக்க…
ரயில் நிலைய நடைமேடை பயணச்சீட்டு, ஓய்வு அறை கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சோலார் குக்கர், அனைத்து வித அட்டை பெட்டிகளுக்கு 12 சதவிகித வரி விதிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.
கட்டுப்படுத்த…
விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு இந்தாண்டில் இதுவரை 71,000 டன் வெங்காயத்தை வாங்கி இருப்பு வைத்துள்ளதாக நுகர்வோர் விவகாரத் துறை அதிகாரிகள் தகவல்.
உரிமங்கள்
விருதுநகர் மாவட்டத்தில் விதிமீறல்கள் காரணமாக 102 பட்டாசு ஆலைகளின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உத்தரவு
1995ஆம் ஆண்டுக்குப் பின் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு சிறப்பு நிலை ஊதிய உயர்வு வழங்க முடியாது என்றும், மறுப்பதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.