வீகேயென் ஆ.பாண்டியன் 25.08.2023 அன்று மறைவுற்றர். மண்ணச்சநல்லூரில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்கள் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தி அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். உடன் திருச்சி மாவட்ட தலைவர் ஞா. ஆரோக்கியராஜ். மற்றும் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக ஒருங்கிணைப்பாளர் ரா. தங்காத்தாள் மற்றும் பெரியார் புத்தக நிலைய பணியாளர்களும் இறுதி மரியாதை செலுத்தினர்