டெக்கான் கிரானிக்கல், சென்னை:
➡ ஜூலை 1இல் அமலாக உள்ள குற்றவியல் சட்டங்களை ஒத்திவைக்க வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
➡நீட், நெட் தேர்வுகளில் தொடரும் முறைகேடுகள் – தடுக்க இஸ்ரோ மேனாள் தலைவர் தலைமையில் உயர்மட்ட குழு!
➡இன்று நடைபெற இருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைப்பு – ஒன்றிய அரசு திடீர் அறிவிப்பு!
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
➡ புதிய உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் மஹ்தாபுக்கு உதவுவதற்காக சுரேஷ் மற்றும் இரண்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்ட பங்கை இந்தியா கூட்டணி நிராகரிக்கும் என தகவல்.
➡ பாட்னா உயர் நீதிமன்றத்தின் இட ஒதுக்கீடு தடை உத்தரவு சமத்துவமின்மையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பிற வழிகளில் விவாதத்திற்கு வழிவகுக்கும் என்கிறது தலையங்க செய்தி.
➡ இடஒதுக்கீட்டை விரிவுபடுத்துவது என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என்றாலும் அதிலும் விதிவிலக்குகளை இ.டபிள்யு.எஸ். சட்டத்திற்கு அளித்துள்ளதே, என்கிறார் பாட்னா சாணக்கியா சட்டப் பல்கலைக்கழக துணை வேந்தர் பைசன் முஸ்தபா.
தி இந்து:
➡ கருணை மதிப்பெண் பெற்ற 1,563 பேர் நீட்-யுஜி தேர்வை இன்று ஜூன் 23ஆம் தேதி மறு தேர்வு எழுதுகின்றனர்.
➡ பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்குவதை உறுதி செய்ய வேண்டும் – 2ஆம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்: – அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
டைம்ஸ் ஆப் இந்தியா:
➡ பாஜக ஆட்சியில் ‘கல்வி முறை பாழாகிவிட்டது’ – நீட்-பிஜி தேர்வு ஒத்திவைப்பு குறித்து ராகுல் காட்டம்.
– குடந்தை கருணா