குடந்தை, ஜூன் 23– அச்சு வெல்லம் கலை இலக்கிய மேடை துவக்க விழா கும்பகோணம் கிரீன் பார்க் ஓட்டலில் 19.6.2024 மாலை 7 மணி அளவில் நடைபெற்றது.
அது சார்ந்த கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா..! கவிதைப்போட்டி பரிசளிப்பு விழா..! ஆகிய நிகழ்ச்சிகளுக்கு வந்திருந்த கவிஞர்களுக்கு வரவேற்பையும் அறிமுக உரையும் அச்சு வெல் லம் ஊடகவியலாளர் விஜய் ஆரோக்கியராஜ் நிகழ்த்தினார்.
அச்சுவெல்லம் கலை இலக்கிய மேடையை துவக்கிவைத்து கும்ப கோணம் மாநகர துணை மேயர் சு.ப.தமிழழகன் உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் கவிஞர் வல்லம் தாஜ்பால், தலைமைக் கழக அமைப்பாளர் குடந்தை க. குருசாமி, சீமாட்டி ரெடிமேட்ஸ் உரிமையாளர் முகமது ஜியாவுதீன் அன்பு மருத் துவமனையின் நிர்வாக இயக்குநர் வழக்குரைஞர் உ. கரிகாலன், மேலாளர் பிரசன்னா, வழக்குரைஞர் ரஜினிகாந்த், உள்ளிட்ட குடந்தை பகுதியைச் சார்ந்த தோழர்கள், தொழிலதிபர்கள் கவிஞர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
அனுப்பானடியைச் சார்ந்த பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநில செயலாளர் பாவலர் சுப. முருகானந்தம் அவர்களுக்கு மாநில அளவில் கவிதை போட்டியில் முதல் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
கவிதையை பிடிப்பது எப்படி? என்ற தலைப்பில் கவிஞர், எழுத் தாளர், ஆவணப்படத் தயாரிப்பாளர் இயக்குநர் ரவி. சுப்பிரமணியம் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
கும்பகோணம் பகுதியின் பிரபல முக்கிய பொறுப்பாளர்கள் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தின் செயலாளர் பேராசிரியர் ம.சேதுராமன், மதுரை மாவட்ட கழக செயலாளர் சுரேஷ், மாவட்ட மகளிர் அணி தலைவர் எம். திரிபுரசுந்தரி மாவட்ட திராவிடர் தொழிலாளர் கழகத்தின் துணை செயலாளர் குமாரமங்கலம் சங்கர் நெய்வேலி கழகத் தோழர் பழனிச்சாமி மற்றும் தனியார் நிறுவன உரிமையாளர்கள், கவிஞர்கள், தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.