நுழைவுத்தேர்வு போராட்ட நாள் இன்று (23.06.1984)
நுழையாமல் தடுப்பதே நுழைவுத் தேர்வு!
1984 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது நுழைவுத் தேர்வு என்ற ஒடுக்கப்பட்ட மாணவர் நலத்திற்கு எதிரான ஒரு முறையை நடைமுறைப்படுத்தினார்.
1984ஆம் ஆண்டு நுழைவுத் தேர்வு வந்தபோது திராவிடர் கழகம் ஆணை எரிப்புப் போராட்டம் நடத்திய நாள் இந்நாள் (1984).
வருமான வரம்பு ஆணையை திரும்பப் பெற்ற எம்.ஜி.ஆர். நுழைவுத் தேர்வு விஷயத்தில் தன் தவற்றைத் திருத்திக் கொள்ளவில்லை. ஆனால், தந்தை பெரியாரின் கொள்கைப் பாசறையில் வளர்ந்த கலைஞர் அவர்கள் 2006ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் 2007ஆம் ஆண்டு நுழைவுத் தேர்வை இரத்து செய்து பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு வழிசெய்து, ஆயிரக்கணக்கான ஒடுக்கப்பட்ட மாணவர்கள் வாழ்வில் ஒளியேற்றினார்.