போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை

viduthalai
2 Min Read

சென்னை, ஜூன் 22- போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள மாணவ- மாணவிகளுக்கு பள்ளி அளவில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சிகள்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-2 வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு நீட் ஜே.இ.இ.போன்றபோட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள், தேர்வுகளை பள்ளி அளவில் நடத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, இந்தபோட்டித் தேர்வுக்கான பயிற்சிகள், தேர் வுகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும்? என்பது தொடர் பான வழிகாட்டு நெறிமு றைகளையும் கல்வித் துறை யும் வெளியிட்டு இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:-

* போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளை திட்ட மிட்டு ஒருங்கிணைத்திட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், இயற்பியல், கணி தம், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங் களில் ஒவ்வொரு பாடத்துக் கும் 2 பாட வல்லுநர்கள் வீதம் 10 ஆசிரியர்கள் அடங் கிய குழுவை அமைக்கவேண் டும். இதில் விருப்பம் உள்ள அல்லது அனுபவமுள்ள ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும்.

கட்டாயப்படுத்தக் கூடாது

* அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்- 2 படித்து வரும் மாணவர் களில் போட்டித் தேர்வுகள் எழுதவிருப்பமும்,ஆர்வமும் உள்ள மாணவர்களின் பட்டி யல் தயார் செய்யப்படவேண் டும். இந்த போட்டித் தேர்வு களில் பெரும்பாலான மாணவர்கள் பங்கேற்க அவர்களை ஊக்கப்படுத்தலாம். ஆனால் கட்டாயப்படுத்தக் கூடாது.

ஒவ்வொரு வாரமும் திங் கட்கிழமை- தாவரவியல், கணிதம், செவ்வாய்க்கிழமை- இயற்பியல், புதன்கிழமை- விலங்கியல், கணிதம், வியாழன் – வேதியியல், வெள்ளி- மீள்பார்வை என்ற அடிப்ப டையில் பயிற்சிகள் வழங்கப் பட வேண்டும்.

*அனைத்து வேலைநாட்க ளிலும் பாடவாரியாக மாலை 4 மணி முதல் 5.15 மணி வரை பயிற்சி வகுப்புகள் கால அட் டவணைப்படி நடத்தப்பட வேண்டும். அதேபோல், பள்ளி அளவிலான தினசரி தேர்வுகள்,ஒவ்வொரு மாத மும் 2 சனிக்கிழமைகள், முழு ஆண்டு விடுமுறைநாட்களில் சிறப்பு பயிற்சி அளித்திட மாநில ஒருங்கிணைப்புக்குழு உதவிபுரியும். மேலும் பள்ளி களில் உள்ள உயர்தொழில் நுட்ப ஆய்வகம் வழியாகவும் பயிற்சிகள் வழங்கப்படும். என்பது போன்ற பல்வேறு தகவல்கள் வழிகாட்டு நெறி. முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *