அமெரிக்காவில் கருப்பு இனத்தவர்கள் நடத்திய நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு

viduthalai
1 Min Read

வாஷிங்டன், ஜூன் 22- அமெரிக்காவில் கருப்பினத்தவர்களுக்கு ஆதர வான ஜூன்டீன்த் நிகழ்ச் சியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

அமெரிக்காவில் கடந்த 160 ஆண்டுகளுக்கு முன்புலட்சக்க ணக்கான கருப்பின மக்கள் அடிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். பின்னர் 13-ஆவது அரசமைப்பு திருத்தச்சட்டம் 1865-இன் படி அங்கு அடிமை முறை ஒழிக்கப்பட்டது.

இதன்மூலம் 1865-ஆம் ஆண்டு ஜூன் 19-இல் மக்கள் அடிமைத்த னத்தில் இருந்து விடுதலை யானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நாளானது ஜூன்டீன்த் என்ற பெயரில் அங்கு கொண் டாடப்படுகிறது. இதற்காக அங்கு நாடு முழுவதும் அரசு விடுமுறையும் விடப்பட்டு உள் ளது.
அந்தவகையில் கலிபோர் னியா மாகாணம் ஓக்லாந்தில் ஜூன்டீன்த்கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு ஆடிப்பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதன் ஒருபகுதியாக அங் குள்ள சாலைகளில் வாகன அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது சிலர் அந்த கார்களை மறித்து அதன் மேலே ஏறி ஆடினர். இதனால் அந்த காரில் இருந்த வர்கள் அவர்களை தட்டிக் கேட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த ஒரு தரப் பினர் திடீரென துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தனர். இதனையடுத்து அங்கு கூடியிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

எனினும் இந்த துப்பாக்கிச் சூட்டில் 15பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர் கள் அவர்களை மீட்டு சிகிச் சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத் தால் அங்கு சிறிது நேரம் பரப ரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *