“விடுதலை சந்தா” சேர்ப்பதற்காக வீடு தோறும் விடுதலை – வீதி தோறும் பிரச்சாரம் என்ற முறையில் விடுதலையின் தேவையை மக்கள் மத்தியில், மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் அறியும்படி தமிழர் தலைவரின் வேண்டுகோளை ஏற்று சந்தா சேர்க்கும் பணியிலிருந்து கழகத் தோழர்களிடம் விடுதலை தமிழ் புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் குடந்தை அரசன் ஓராண்டு விடுதலை சந்தா ரூபாய் 2000 வழங்கினார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திராவிடர் தொழிலாளர் சங்க பொருளாளராக செயலாற்றி மறைந்த கல்லூர் காசிநாதனின் மகன் பொறியாளர் சரவணன் காசிநாதன் அவர்கள் விடுதலை அரையாண்டு சந்தா ரூபாய் 1000 வழங்கினார்.
தலைமைக் கழக அமைப்பாளர் குடந்தை க. குருசாமி, காப்பாளர் தாராசுரம் வை. இளங்கோவன், திராவிடர் தொழிலாளர் கழகத்தின் மாவட்ட துணை செயலாளர் குமாரமங்கலம் சங்கர், மாவட்ட மகளிர் அணி தலைவர் எம். திரிபுரசுந்தரி ஆகியோர் விடுதலை சந்தா சேர்ப்பு பணியை செய்தார்கள்.
நாச்சியார் கோவில் திருநறையூர் பகுதியைச் சார்ந்த பெரியார் சிந்தனையாளர் சா. வெங்கடேசனிடமிருந்து ஓராண்டு சந்தா மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி முன்னிலையில், தலைமைக் கழக அமைப்பாளர் குடந்தை க.குருசாமி ரூ.2000 பெற்றுக் கொண்டார். மாவட்ட மகளிர் அணி தலைவர் எம்.திரிபுரசுந்தரி உடனிருந்தார்.
பட்டுக்கோட்டை மருத்துவர் பத்மானந்தன் விடுதலை ஆயுள் சந்தா ரூபாய் 20 ஆயிரத்தை மாவட்டத் தலைவர் அத்திவெட்டி வீரையனிடம் வழங்கினார். (20.6.2024)
தர்மபுரி டி.இளையராஜா ஆசிரியர், ஒராண்டு விடுதலை சாந்தாவிற்காண தொகை ரூ.2000 திராவிடர் கழக மாவட்டத் தலைவர் கு.சரவணன் அவர்களிடம் வழங்கினார். உடன் பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் இர. கிருஷ்ணமூர்த்தி, தி. அன்பரசு இருந்தனர்.