22.6.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* நீட், நெட் பஞ்சாயத்தே முடியவில்லை… இந்த நிலையில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு வரும் ஜூன் 25 முதல் ஜூன் 27 வரை நடைபெற இருந்த சிஎஸ்அய்ஆர் நெட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசியத் தேர்வு முகமை அறிவிப்பு.
* மதுபான முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு சிபிஅய் நீதிமன்றம் வழங்கிய பிணை நிறுத்தி வைப்பு: டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தேர்வுகளில் நடைபெறும் மோசடிகள், நாட்டின் வேலைவாய்ப்பின்மை பிரச்சினை, இவற்றை அலட்சியப்படுத்துவது நல்லது அல்ல என்கிறது தலையங்க செய்தி.
* நீட்-யு.ஜி. கலந்தாய்வை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘சங் பரிவாரின் உயர் ஜாதி அரசியல்…’: தற்காலிக மக்களவைத் தலைவர் நியமனம் தொடர்பாக மோடி அரசை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம்.
* ’நீட் – நெட்’ நெருக்கடி: தேர்வு முறைத் தோல்வி. நுழைவுத் தேர்வுகளின் சமீபத்திய சர்ச்சை நாம் நினைப்பதை விட இன்னும் மோசமாக உள்ளது என்கிறார் கட்டுரையாளர் சுஜாதா ராவ்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஜூன் 24-ஆம் தேதி தொடங்கும் 18ஆவது மக்களவை கூட்டத்தில், நீட், குற்றவியல் சட்டங்கள், மக்களவைத் துணைத் தலைவர் நியமனம் மீது ஒன்றிய அரசை குறிவைக்க இந்தியா கூட்டணி திட்டம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* மக்களவையில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்ட புதிய கிரிமினல் சட்டங்கள் அமல்படுத்துவதை ஒத்தி வைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு மம்தா கடிதம்.
தி டெலிகிராப்:
* 2024 பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு, உ..பி.யில் ஏற்பட்ட தோல்வி காரணமாக, அரசு ஊழியர்கள் பொது விவாதங்களில் பங்கு பெற யோகி அரசு தடை விதிப்பு. “முன் அனுமதியின்றி எந்த ஒரு அரசு ஊழியரும் எந்த செய்தித்தாள் அல்லது பத்திரிகையை நடத்தவோ, நிர்வகிக்கவோ அல்லது திருத்தவோ முடியாது” என உத்தரவு.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment