குடந்தை, ஜூன் 22- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கும்பகோணம் கிளையின் சார்பாக கும் பகோணம் காந்தி பார்க் எதிரில் அமைந்துள்ள ஜனரஞ்சனி அரங்கில் 17.6.2024 அன்று மாலை 7 மணி அளவில் கருத்தரங்கு நடைபெற்றது.
கருத்தரங்கு நடனம், கவிதை, இசையுடன் கோலாகலமாக துவங்கியது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கும்பகோணம் வட்ட கிளையின் மாநகர தலை வர் மா. கலைச்செல்வன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகர செயலாளர் கா. அசோக்குமார், ஆர் .ராஜகோபாலன், பழ. அன்புமணி, தி. இருதயராஜா, இரா. ராஜா, ஆகியோர் நிகழ்ச் சியை முன்னின்று ஒருங் கிணைத்து நடத்தினார்கள்.
மாவட்டத் தலைவர் சா. ஜீவபாரதி, அவர்களும் மாவட்ட செயலாளர் இரா. விஜயகுமார் அவர்களும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வாழ்த் துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் “சிந்துவெளி பண்பாடு சந்தித்த சவால்கள்” என்ற தலைப்பில் புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு நிறுவனத்தின் மானிட வியல் விரிவுரையாளர் முனைவர் பக்தவச்சல பாரதி சிறப் புரை ஆற்றினார்.
“ஆதி இசை எங்களின் தமிழிசையே” என்ற தலைப்பில் தமிழ் பல்கலைக்கழக மொழிப் புல மெய்யியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் கோ.பா. நல்லசிவம் ஆய்வுரையாற்றினார்.
முற்போக்கு சிந்தனை உள்ள பாடல்களுக்கு பல்வேறு பள்ளிகளின் மாணவிகள் சிறப்பாக பரதநாட்டிய நிகழ்ச் சியை நடத்திக் காட்டினார்கள். நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் இயக்கங்களைச் சார்ந்த தோழர்களும் கலந்து கொண்டு சிறப் பித்தார்கள். திராவிடர் கழகத்தின் சார்பில் விரிவுரையாளர் முனைவர் பக்தவச்சல பாரதி அவர்களுக்கு “விடுதலையால் விடுதலை” நூல் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.