கரூர், ஜூன் 22- கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ. ஜோதிமணி இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக கரூர் தொகுதியில் போட் டியிட்டு வெற்றி பெற்றார்.
கரூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் பொறுப்பாளர்களை பொதுக்குழு உறுப்பி னர் சே.அன்பு இல் லத்தில் சந்தித்து பொறுப் பாளர்களுக்கு சால்வை அணிவித்து தான் வெற்றி பெற்றதற்கு விடுதலை நாளிதழுக்கு ஓராண்டு சந்தா 2000மும் வழங்கி நன்றியையும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் சின்னச்சாமி, மாநகராட்சி கவுன்சிலர் ஸ்டீபன்பாபு, கரூர் மாவட்ட கழகத்தின் தலைவர் ப. குமாரசாமி, பொதுக்குழு உறுப்பினர் சே. அன்பு, கட்டளை வைரவன், கார்த்தி, காப்பாளர் வே. ராஜு, மாவட்டச் செயலாளர் ம. காளிமுத்து, கரூர் நகர தலைவர் க நா சதாசிவம், மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் பொம்மன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ராமசாமி, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் ஜெகநாதன், மாவட்ட இளைஞரணி தலைவர் அலெக்ஸ், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தலைவர் பெருமாள், ஒன்றிய தலைவர் நானாபரப்பு பழனிச்சாமி, பெரியார் பெருந்தொண்டர்கள் வெங்கல்பட்டி கணேசன், கிருஷ்ணராயபுரம் ராமலிங்கம், மாணவர் கழகச் செயலாளர் பூபதி, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்ட கழகத்தின் பொறுப்பாளர்களை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணி நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்
Leave a Comment