எந்தத் தேர்வையும் முறைகேடு இல்லாமல் நடத்த
மோடி அரசால் முடியவில்லை – எதிர்க்கட்சிகள் கண்டனம்
புதுடில்லி, ஜூன் 22- உதவிப் பேராசிரியர்கள் பணிக்கு தகுதி பெறுவதற்காக பல்கலைக்கழக மானியக் குழுவால் ‘நெட்’ தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த 18.6.2024 அன்று இத்தேர்வு நடந்தது. ஆனால்,மறுநாளே இத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. இந்நிலையில், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் கூறியிருப் பதாவது:-
கியூட் தேர்வு, நீட் தேர்வு, நெட் தேர்வு என ஒவ்வொன்றிலும் வினாத்தாள் கசிவு, முறைகேடுகள் நடக்கின்றன. நாட்டின் கல்வி முறையையும், தேர்வு முறையையும் மோடி அரசு எப்படி நாசப்படுத்தி இருக்கிறது என்பது அம்பலமாகி விட்டது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, தேசிய ஆள்தேர்வு முகமை (என்.ஆர்.ஏ.) என்ற அமைப்பை தடபுடலாக மோடி அரசு தொடங்கியது. ஆனால், 4 ஆண்டுகளாகியும் அந்த அமைப்பு ஒரு தேர்வு கூட நடத்தவில்லை. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்க ளிடையே பிரதமர் மோடி ஆண்டுதோறும் பேசுகிறார். அதற்கான நிதி ஒதுக்கீடு 175சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், மோடி அரசால் ஒருதேர்வைக்கூட வினாத் தாள் கசிவோ, முறைகேடுகளோ இல்லாமல் நடத்த முடியவில்லை.
-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ்
எம்.பி. சாகேத் கோகலே கூறியதாவது: நீட் தேர்வு முறைகேடுகளை தொடர்ந்து, நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் வாழ்க்கை நாசமாக்கப்பட் டுள்ளது.அதற்குபொறுப்பேற்கக்கூடமோடி அரசுமுன்வரவில்லை. ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை நீக்க வேண்டும். -இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. ஜான் பிரிட்டாஸ், நெட்தேர்வு வினாத்தாளில், ராமாயணம் மற்றும் ராமன்கோவில் தொடர்பான கேள்விகள் இடம் பெற்று இருந்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது.