சட்டமன்றத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
சென்னை, ஜூன் 22– ரூ.284 கோடியே 70 லட்சம் செலவில் 11மாவட்டங்களில் உள்ள 24 அணைகள் சீரமைக்கப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் அறிவித்துள்ளார்.
மானிய கோரிக்கை
சட்டமன்றத்தில் நேற்று (21.6.2024) நீர்வளத்துறையின் மீதான மானிய கோரிக்கை விவாதத்திற்கு பிறகு துறை சார்ந்த அறிவிப்புகளை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
* கடலூர், சேலம், தஞ்சை, திருப்பத் தூர், திருப்பூர், திருவண்ணாமலை, திருச்சி ஆகிய 7 மாவட்டங்களில், 10 இடங்களில் ரூ.71கோடியே 86 லட்சம் செலவில் தடுப்ப ணைகள் பணிகள் மேற்கொள்ளப்படும்.
* செங்கல்பட்டு, புதுக்கோட்டை,ராம நாதபுரம், ராணிப்பேட்டை, தென்காசி தஞ்சை, விருதுநகர் ஆகிய 7 மாவட்டங் களில் 10 இடங்களில் அணைகட்டுகள் அமைக்கும் பணி ரூ55கோடியே 36லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.
ஜமீன் கண்மாய்கள்
* கடலூர் மற்றும் மயிலாடுதுறை, திரு வண்ணாமலை, திருவாரூர் ஆகிய 3 இடங் களில் ரூ.103கோடியே 23 லட்சம் செலவில் தரைகீழ் தடுப்பணைகள் கட்டப்படும்.
*சிவகங்கைமாவட்டத்தில் மேனாள் ஜமீன்கண்மாய்களான 7 குறு பாசன கண் மாய்களை புனரமைக்கும் பணி ரூ.4 கோடியே 97 லட்சம் செலவில் மேற்கொள் ளப்படும்.
* ஈரோடு மாவட்டத்தில் உள்ள காலிங்கராயன், நெல்லைமாவட்டத்தில் உள்ள பழவூர் அணைக்கட்டுகளை ரூ.3 கோடியே7லட்சம் செலவில் புனரமைப்பு செய்யப்படும்.
* பாசன நிலங்களுக்கு நீர் வழங் குவதை உறுதி செய்ய 11 மாவட்டங் களில் உள்ள 24 அணைகள் மற்றும் தடுப்பணைகள் ரூ.284 கோடியே 70 லட்சம் செலவில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். அதன்படி இராணிப்பேட்டையில் உள்ள திரு மலைச்சேரி மற்றும் புதுப்பாடி கிரா மங்களில் உள்ள பாலாறு அணை ரூ.200 கோடியே 66 லட்சம் செலவில் சீரமைக்கப்படுகிறது. இதுதவிர கள்ளக்குறிச்சி, புதுக் கோட்டை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், கடலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட் டங்களில் உள்ள அணைகள் சீரமைக்கப் படும்.
கால்வாய்கள்
*தஞ்சை, மதுரை, ராமநாதபுரம், திருப்பத்தூர், கோவை, வேலூர், திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருப்பூர், கரூர், திருவாரூர், திரு வண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களில் உள்ள 25 கால்வாய்கள் ரூ.116 கோடியே 52 லட்சம் செலவில் சீர மைக்கப்படும்.
*நீர் வீணாவதை தடுக்க விருதுநகர், காஞ்சீபுரம், வேலூர், புதுக்கோட்டை, தென்காசி,திண்டுக்கல், ராமநாதபுரம், திருச்சி, ஆகிய மாவட்டங்களில் உள்ள 15 ஏரிகள் ரூ.69கோடியே 17 லட்சம் செலவில் சீரமைக்கப்படும்.
* வேலூர், கடலூர், திருவள்ளூர், சேலம், அரியலூர், மதுரை, ஆகிய மாவட் டங்களில் பழுதடைந்துள்ள தரைப்பாலம் மற்றும் குழாய்களில் அடைப்பு நீக்குதல் போன்ற பணிகள் ரூ.42 கோடியே 76 லட் சம் செலவில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் இயங்கும் குவாரிகளை கண்காணிக்க புதிய மென்பொருள்
தமிழ்நாடு சட்டசபையில் நேற்று (21.6.2024) நீர்வளத் துறை, இயற்கை வளங்கள் துறை மானி யக் கோரிக்கையில் விவாதம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்த விவாதங்க ளுக்கு அந்தத் துறையின் அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து பேசினார். பின்னர் அவர் இயற்கை வளங்கள் துறைக்கான அறிவிப்பை வெளியிட்டார்.
அதில், சுரங்கம் மற்றும் குவாரிகளின் செயல்பாட்டை கண்காணிக்க குவாரி மேலாண்மை மென்பொருளை தமிழ் நாடு கனிம நிறுவனம் பயன்படுத்தி வருகிறது. தற்போதைய தேவைகளை கருத்தில் கொண்டு புதிய வணிக மேலாண்மை மென்பொருளை உருவாக்கி, குவாரி களின் செயல்பாட்டை துல்லியமாக கண்காணிக்கவும், திறனாய்வு செய்ய வும், புதிய திட்டங்களை தீட்டவும் ஏற் பாடு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தாமிரபரணியில் எல்லைக்கற்கள்
அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, ‘தாமிரபரணி ஆற்றின் இருகரைகளிலும் நவீன நில அளவை கருவி மூலம் எல்லைக்கற்கள் நடும் பணி ரூ.35 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்’ என்றார்.