கைவினைப் பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்க ரூ. 41 கோடியில் சென்னை அங்காடி

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அமைச்சர் பி.கே.சேகர்பாபு சட்டப்பேரவையில் தகவல்

சென்னை, ஜூன் 22– பாரம்பரிய கைவினைப் பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்க, ரூ.40 கோடியில் பல்வேறு வசதிகளுடன் கூடிய கடைகள், அரங்கங்கள் கொண்ட சென்னை அங்காடி அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) மானியக் கோரிக்கைமீதான விவாதத்துக்கு (21.6.2024) பதிலளித்து பேசியபோது, அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்ட அறிவிப்புகள்:

சென்னை மாநகரில் 10 பொது நூலகங்கள் மின்-வழி கற்றல் மற்றும் பகிர்ந்த பணியிட (Co-Working Space) மய்யங்களாக ரூ.20 கோடியில் மேம்படுத் தப்படும். தமிழ்நாட்டின் பாரம்பரிய கலாச்சாரத்தை பறைசாற்றும் கைவினைப் பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்க ஏதுவாக, பல்வேறு வசதிகளுடன் கூடிய கைவண்ணம் சதுக்கம் (சென்னை அங்காடி), 5 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.40 கோடியில் அமைக்கப்படும்.

மேலும், சென்னை மாநகருக்கு வெள்ளக் கட்டுப்பாடு வரைபடம் (Flood Control Map) தயாரிக்கப்படும். மெரினா கலங்கரை விளக்கம் முதல் தீவுத்திடல் வரை மெரினா பாரம்பரிய வழித்தடம், சேத்துப்பட்டு பசுமை பூங்கா, கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம், தலா ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும்.

தியாகராய நகர், அய்யப்பன்தாங்கல், திருவான்மியூர், ஆவடி, பாடியநல்லூர், தங்கசாலை வள்ளலார் நகர் ஆகிய பேருந்து நிலையங்கள் தலா ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும்.கோயம்பேடு மொத்த விற்பனைஅங்காடி வளாகத்தில் ரூ.15 கோடியில் மழைநீர் வடிகால், கொண்டித் தோப்பு வால்டாக்ஸ் சாலையில் ரூ.20 கோடியில் சமுதாயக் கூடம் மற்றும் விளையாட்டு திடல், ரூ.30 கோடியில் சென்னையில் 3 பன்னோக்கு மய்யங்கள் அமைக்கப்படும்.

மேலும், சேப்பாக்கம் பகுதியில் ரத்த சுத்திகரிப்பு மய்யம் (Dialysis centre) ரூ.10 கோடியில் ஏற்படுத்தப்படும். அதேபோல், ராயபுரம் மூல கொத்தளத்தில் ஒருங்கிணைந்த விளையாட்டு அரங்கம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

எழும்பூர் ஹாரிங்டன் சாலை மற்றும் திரு.வி.க. நகர் கொன்னூர் நெடுஞ்சாலையில் சமுதாயக்கூடம் தலா ரூ.10 கோடியிலும், மயிலாப்பூர் லஸ் நிழற்சாலையில் பண்பாட்டு அரங்கம் ரூ.3 கோடியிலும் உருவாக்கப்படும். மேலும், நெமிலிச்சேரியில் உள்ள புத்தேரி ஏரி ரூ.5 கோடியிலும், போரூர் மற்றும் பெருங்குடி ஏரிகள் தலா ரூ.10 கோடியிலும் மேம்படுத்தப்படும் என்பன உட்பட 46 அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *