கடலூர், ஆக. 27- மதுரையில் நடைபெற்ற ரயில் விபத்திற்கு ரயில்வே பாதுகாப்பு துறையின் முழுத் தோல்வியே காரணம் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம் சாட்டினார்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மதுரையில் நடைபெற்ற ரயில் விபத்தில் ஒன்பது பேர் இறந்துள்ளனர். 8 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ரயில்வே துறையும், மாநில அரசும் நிவாரணங்கள் அறிவித்துள்ளன. இறந்த வர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன். தீப்பிடிக்க கூடிய எந்தப் பொருளையும் ரயிலில் கொண்டு செல்லக்கூடாது. ஆனால் சமையல் எரிவாயு உருளைகளோடு கடந்த பத்து நாட்களாக ஒரு பயணிகள் பெட்டி தென்னிந்தியா நெடுக பயணித்திருக்கிறது. எந்த ரயில் நிலையத்திலும் அந்த பெட்டி ஆய்வுசெய்யப்பட வில்லை. இந்த விபத்து மிகுந்த வேதனையாக உள்ளது. இந்த விபத்து ரயில் பயணத்தின் பொழுது நிகழ்ந்தி ருந்தால் எவ்வளவு பெரிய விபத்தாக மாறி இருக்கும், ரயில் நிலையத்திற்கு வந்த பிறகு நடந்தது. இதுவே ரயில் வந்து கொண்டிருக்கும்போது நடந்திருந்தால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு விபத்தில் சேதம் இருந்திருக்கும். இதற்கு ரயில்வே பாதுகாப்பு துறையின் தோல்வியே முழுக்காரணம்.
ரயில்வே பாதுகாப்புத் துறையை பலப்படுத்த வேண்டும். 10 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனை நிரப்பப்பட வேண்டும். புறநகர் ரயில்களில் பெண்களுக்கான பெட்டிகளில் போதிய பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை என்பதற்காக பொதுப் பெட்டிகளின் நடுவில் பெண்களுக்கான பெட்டிகளை இணைக்கிறோம் என்று ரயில்வே அதிகாரி அறிக்கை விட்டார். அவ்வளவு பாதுகாப்பு படையினர் இடங்கள் காலியாக உள்ளன. போதிய பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் இல்லை. கொள்கையும் இல்லை, சுற்றுலாப் பயணிகள் பயணிக்கின்ற பெட்டிகளை பாதுகாப்பு சோதனைகள் இடுவது சம்பந்த மாக தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லை. அதேபோல் ரயில் பெட்டிகளுக்குள் தீயணைப்பு கருவி குளிரூட்டப்பட்ட பெட்டிகளுக்கு மட்டுமே உள்ளது. ஏனைய பெட்டிகளில் தீயணைப்புக் கருவிகள் இல்லை. சுற்றுலா பயணி களின் ரயில் பெட்டிகளில் தீய ணைப்புக் கருவிகள் பொருத்தப்பட வேண்டும். ரயில்வே நிர்வாகம் பயணிகள் பாதுகாப்பு விடயத்தில் தொடர்ந்து அலட்சி யப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது.
10 நாட்கள் சமையல் எரிவாயு உருளைகளோடு தீ பிடிக்கும் பொருட் களோடும் பாதி இந்தியாவை பல்வேறு ரயில் நிலையங்கள் வழியாக இந்த ரயில் பெட்டி கடந்து வந்துள்ளது. இவ்வாறு கூறினார்.