புதுடில்லி, ஆக.27 கங்காவரம் துறைமுகத்தை அதானி குழுமம் விலைக்கு வாங்கியது தொடர்பாக காங்கி ரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுதொடர்பான காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பதிவில், பதிவு ஒன்றை வெளி யிட்டுள்ளார். அதில், “பல துறைகளில் மோடி உருவாக்கிய ‘ஏகாதிபத்தியம்’ (அதானி குழுமம்), அதிர்ச்சி அளிக்கும் வகையில், கங்காவரம் துறை முகத்தையும் கையகப்படுத்தி உள்ளது. கடன் இல்லாத- ஆந்திரா வின் கங்காவரம் துறைமுகத்தை அதானி எப்படி 6 ஆயிரத்து 200 கோடிக்கு விலைக்கு வாங்கினார்? கடன் சுமை நிறைந்த கிருஷ்ணபட்டி னம் துறைமுகத்துடனான அதானி யின் சொந்த ஒப்பந்தத்தை விட மிகக் குறைந்த தொகைக்கு இது எவ்வாறு கையகப்படுத்தப் பட்டது?” என்ற கேள்விகளை எழுப்பியுள்ளார். “நாடா ளுமன்றக் கூட்டுக்குழு தான் உண்மையைக் கண்டுபிடிக்க முடியும்” என்றும் அவர் குறிப்பிட் டுள்ளார்.