சென்னை, ஜூன் 21- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுக உறுப்பி னர்களை மீண்டும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்கு மாறு கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு,
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். டிசம்பர் 2001 இல் இது போன்று ஒரு நிகழ்வு கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியில் நடைபெற்று, 52 நபர்கள் மரணமுற்று, 200-க்கும் மேற்பட்டோர் மிகுந்த பாதிப்புக்குள்ளானார்கள். அப்போது உரிய நடவடிக்கை சரிவர எடுக்கப்படவில்லை என்று எல்லோரும் கருத்துத் தெரிவித்திருந்தனர். நம்முடைய பாட்டாளி மக்கள் கட்சித் தலை வர் ஜி.கே. மணி அவர்க ளும், நம்முடைய தி.வேல்முருகன் அவர்க ளும் அவையிலேயே இதுகுறித்து மார்ச் 2002 ஆம் ஆண்டு உரை யாற்றியிருக்கிறார்கள்.
தற்போது இந்தச் சம்பவம் குறித்து என்னுடைய கவனத்திற்கு வந்தவுடனேயே நான் தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். அது குறித்து நான் அனைத்து உறுப்பினர்களும் பேசிய பின்னர் விரிவாகப் பதில் வழங்குகிறேன்.
அப்போது சரிவர நடவடிக்கை எடுக்கப்படவில்லை; தற்போது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள காரணத்தால், இப்போது பேசுகிற உறுப்பினர்கள் அந்த நிகழ்வு குறித்து பேசுவார்களோ என பயந்துதான் இவர்கள் இன்றைக்குத் திட்டமிட்டு ஒரு நாடகத்தை அரங்கேற்றிவிட்டு, விதி களுக்குப் புறம்பாக நடந்துகொண்டு, மர புகளுக்கு மாறாக குழப்பம் விளைவிக்க முயன்று வெளியேற்றப்பட்டடு இருக்கிறார்கள். ஜனநாயக முறையில் இந்த மாமன்றம் நடைபெறவேண்டும் என்ப தில், தலைவர் கலைஞர் அவர்களும், நானும் அசையாத கொள்கை உறுதி கொண்டவர்கள். மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திலே பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்பதில் கொள்கை உறுதி கொண்டவன் இந்த முதல மைச்சர்.
தாங்களும் பல கோரிக்கைகள் வைத்து, பேரவை முன்னவர் அவர்களும் பேசுவதற்கு வாய்ப்பு தரலாம் என பரிந்துரை செய்தும் முதலமைச்சராக, அமைச்சர்களாக இருந்தவர்கள் இங்கே நடந்துகொண்ட முறை தவிர்த்திருக்கப்பட வேண்டியதுதான்.
பேரவை விதி 120-இன்கீழ் பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். அதில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. எனி னும் என்னுடைய வேண்டுகோளாக ஒன்றைச் சொல்ல விரும்பு கிறேன். இன்றைக்குக் காலையிலும், மாலை யிலும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ள நிலையில், வெளி யேற்றப்பட்டவர்கள் இந்த அவைக்கு வினாக்கள் விடைகள் நேரம் முடிந்த பின்னரே அனுமதிக்கப் பெறலாம் என்னும் வேண்டுகோளையும், பிரதான எதிர்க்கட்சி தன்னுடைய கருத்தினைப் பதிவு செய்ய வாய்ப்பு தர வேண்டும் என்றும், இதனை தாங்கள் பரிசீலித்து ஆவன செய்ய வேண்டுமெனக் கேட்டு அமைகிறேன்.
-இவ்வாறு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் உரையில் குறிப்பிட்டார்.
அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றம்!
முன்னதாக இன்று (21.6.2024) காலை சட்டமன்றம் கூடியதும், கேள்வி – பதில் நிகழ்வு தொடங்கவிருந்த நிலையில், அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்புக்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக கருப்பு உடை அணிந்து பேரவை நிகழ்வை நடத்தவிடாமல் அமளியில் ஈடுபட்டனர்.
பேரவைத் தலைவர் மு.அப்பாவு, அவர்களை அமைதியாக இருக்கு மாறும், கேள்வி நேரம் முடிந்தவுடன் இது தொடர்பான கவன ஈர்ப்பில் பங்கேற்று எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உங்கள் வாதங்களை எடுத்து வைக்கலாம் எனத் தெரிவித்தும், அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அவையை நடத்தவிடாமல் அமளி யில் ஈடுபட்டதால், பேரவைத் தலைவர், அவர்களை இன்று ஒரு நாள் அவை நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதி மறுத்து வெளியேற்ற உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து அவைக் காவலர்களால் அவர்கள் வெளி யேற்றப்பட்டனர்.
பின்னர் கேள்வி – பதில் நேரம் முடிந்தவுடன் கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு நிகழ்வு தொடர்பாகக் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்மீது அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் பங்கேற்று பேசினர். அதற்கு அவை முன்ன வர் துரைமுருகன் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பதிலளித்துப் பேசினர்.
பா.ம.க. வெளிநடப்பு
முன்னதாக இந்தக் கவன ஈர்ப்புத் தீர்மா னத்தின்மீது பேசிய பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் குழுத் தலைவர் ஜி.கே.மணி அவர்கள், முழு மதுவிலக்கைக் கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி தமது உறுப்பினர்களுடன் வெளிநடப்புச் செய்தார்.