சென்னை, ஜூன் 21- தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பை சீர்குலைக்கும் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கம் சார்பில் ‘நீட்’ எதிர்ப்பு கருத்தரங்கம் கடந்த 19 ஆம் தேதி சென்னையில் நடை பெற்றது. இந்த கருத்தரங்கில் பங்கேற்றவர்கள் பேசியதன் சுருக்கம் வருமாறு:
பத்திரிகையாளர் என்.ராம்
‘நீட்’ என்றாலே லூட் என விமர்சித்த பத்திரிகையாளர் என்.ராம், “நீட் பயிற்சி மய்யங்களின் நோக்கம் கொள்ளையடிப்பதும், சுரண்டு வதும்தான். மருத்துவக் கல்வி மீதான மக்களின் தாகத்தை அதற்கு பயன்படுத்திக் கொள்கின்றன. கிராமப்புறங்கள், பட்டியலின, பழங்குடி சமூக மாணவர்களால் கட்ட ணம் செலுத்தி பயிற்சி பெற முடியாது. பணம் படைத்தவர்கள் மட்டுமே பயிற்சி மய்யங்களில் சேர முடி யும். இதனால் ஏற்றத்தாழ்வு அதிகரிக்கிறது. சமூகநீதி பறிக்கப்படுகிறது” என்றார்.
“நீட் தேர்வில் 2020 – 2023 ஆண்டுகளில் சராசரி மதிப்பெண் 259 முதல் 297 வரை இருந்தது. இந்த ஆண்டு அது 323.55 ஆக உயர்ந்துள்ளது. முழு மதிப்பெண்கள் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையும் செங்குத்தாக உயர்ந்துள்ளது. மதிப்பெண்கள் வழங்கப்பட்டதிலும் தவறு உள்ளது. இந்த விவரங்கள் முறைகேடு நடந்திருப்பதை உறுதிப்படுத்துகிறது. ‘நீட்’ தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை” என்றும் கூறினார்.
“நீட் தேர்வின் நம்ப கத்தன்மை அரித்துபோய் விட்டது. இடதுசாரி மாணவர் அமைப்புகள் மட்டுமின்றி, ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்புகள் கூட எதிர்க்கின்றன. மாநில உரி மைகளை ‘நீட்’ பறிக்கி றது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் மீது பாஜக அரசு போர் நடத்துகிறது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தெளிவான வழிகாட்டுதலை வழங்காதது ஏமாற்ற மளிக்கிறது” என்றும் அவர் கூறி னார்.
மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற நுழைவுத் தேர்வு (வியாபம்) ஊழல், டி மேட் ஊழல் குறித்து குறிப்பிட்ட அவர், “24 லட்சம் பேர்‘நீட்’ எழுதும் நிலையில் ஊழலை தடுக்க முடியாது. இதில் நடைபெறும் மிகப் பெரிய ஊழலை தடுக்க தற்போ துள்ள கட்டமைப்புகளால் முடி யாது. ‘நீட்’ விஞ்ஞான முறையி லான தேர்வும் அல்ல. அதில் வெளிப்படைத் தன்மையும் இல்லை. மாநில உரிமைகளை பறிக்கிறது. சமூகநீதிக்கு எதிராக உள்ளது. எனவே, ‘நீட்’ தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே தேவையற்றது. நீட்டுக்கு எதிரான போராட் டத்தை பிற மாநிலங்களும் தொடர வேண்டும்” என்று அவர் அழைப்பு விடுத்தார்.
நீதியரசர் அரிபரந்தாமன்
சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் து.அரி பரந்தாமன் பேசுகையில், நீதிமன்ற தீர்ப்புகள் வாயிலாக கல்வி வணிகமயமான வரலாற்றையும், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இருந்தபோதும் நீட் தேர்வுக்கு திமுக தடை உத்த ரவு பெற்றதையும் நினைவு கூர்ந் தார்.
“அரசு மருத்துவக்கல்லூரி இடங்கள், தனியார் கல்வி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டிற் கான 50 விழுக்காடு இடங்களுக்குத் தான் ‘நீட்’ தேவையில்லை என்கி றோம். ‘நீட்’ மாநில உரிமைகள், கூட்டாட்சிக்கு எதிராகவும், சமூக, பொருளாதார நீதிக்கு எதிராகவும் இருப்பதால் எதிர்க்கிறோம்” என்றார்.
“தமிழ்நாட்டில் ஒரு மருத்து வக்கல்லூரியைக் கூட ஒன்றிய அரசு தொடங்கவில்லை. 36 மருத்துவக் கல்லூரிகளை வைத்துள்ள மாநில அரசுக்கு தேர்வு நடத்தும் உரிமை இல்லை என்பதை எப்படி ஏற்க முடியும்?” என்று கேள்வி எழுப்பிய அவர், “அரசமைப்புச் சட்டப்படி ‘நீட்’ தேர்விலிருந்து விலக்குக் கோரி மாநில அரசு இயற்றிய சட்டத்தை ஒன்றிய அரசு கிடப்பில் போட்டு வைத்துள்ளது. பல்க லைக்கழகங்கள், மருத்துவமனை கள் அனைத்தும் மாநில பட்டிய லில் உள்ளது. எனவே, மாநில அர சின் சட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி தர வேண்டும்” என்றார்.
பிரின்ஸ் கஜேந்திரபாபு
முன்னதாக பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, கருத்த ரங்கின் நோக்கத்தை விளக்கி பேசுகையில், “நீட் ஒரு வணிக சூதாட்டம். இந்த தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி – என்டிஏ) ஒரு கல்வி நிறுவனம் அல்ல; மாணவர்களை மதிப்பீடு செய்யும் நிபுணத்துவம் பெற்ற அமைப்பும் அல்ல. நெகட்டிவ் மதிப்பெண்களை வைத்து மாணவர்களை மதிப்பீடு செய்யும் முறை உலகில் எந்த நாட்டிலும் இல்லை” என்றார்.
மருத்துவர் எஸ்.காசி
இதன் விளைவு, புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டாலும், அவற்றிற்கான மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்க ளில் 90 விழுக்காட்டை பிற மாநில மாணவர்கள் ஆக்கிரமித்துள்ளனர். எனவே, முழுமையாக ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்றார்.
மருத்துவர் டி.காமராஜ்
நிகழ்விற்கு தலைமை தாங்கிப் பேசிய அமைப்பின் தலைவர் மருத்துவர் டி.காம ராஜ், தனியார் பயிற்சி மய்யங்களில் பல லட்சம் ரூபாய் செலவிட்டு படித்தவர்களே ‘நீட்’ தேர்வில் 99 விழுக்காடு தேர்ச்சி பெறுகின்றனர். அதிலும் 71 விழுக்காட்டினர் திரும்பத் திரும்ப தேர்வு எழுதியே தேர்ச்சி பெறுகின்றனர் என்று ஏ.கே.ராஜன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.
மருத்துவர் அரங்கத்தின் செயலாளர் மருத்துவர் சி.கருணாகரன், மருத்துவர் கே.கவிதா லட்சுமி, மருத் துவர் கே.பகத்சிங், தமிழ்நாடு நல் வாழ்வு இயக்கத்தின் தலைவர் மருத்துவர் சி.எஸ்.ரெக்ஸ் சற்குணம், அகில இந்திய வழக்குரைஞர் சங்க மாநில பொதுச்செயலாளர் எஸ்.சிவக்குமார், தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் தலைவர் பி. சத்யநாராயணன், மருத்துவமனை ஊழியர் சங்கங்களின் தலைவர் ஆர்.ரமேஷ் சுந்தர், இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் ரா.பாரதி உள்ளிட் டோர் பேசினர்.