21.6.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 50 பேர் மரணம் – நீதி விசாரணைக்கு உத்தரவு: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
* மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிணை!
* “டார்க்நெட்டில் கசிந்த வினாத்தாள்’’.. யுஜிசி நெட் தேர்வு ரத்து ஏன்? பரபர தகவல்.. சிபிஅய் எப்அய்ஆர்
* தெலங்கானா அரசியல் கட்சிகளின் தலைமைப் பொறுப்புக்கு ஓபிசி, எஸ்.சி. தலைவர்களை நியமிக்க முடிவு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* இந்த ஆண்டு மே 5 அன்று நடைபெற்ற நீட் இளங்கலைத் தேர்வின் பல தேர்வு மய்யங்களில் தேர்வு அறைகளில் கட்டாயம் செயல்படும் இரண்டு சிசிடிவிகள் இல்லை; வினாத்தாள்கள் பாதுகாக்கப்படும் அறைகள் பாதுகாப்பு இல்லாமல் இருந்தது என மதிப்பாய்வில் கண்டுபிடிப்பு.
* மோடியின் பாஜக அரசின் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்: சரத் பவார்
* கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், என்டிஏவை ரத்து செய்ய வேண்டும், சி.பி.எம். வலியுறுத்தல்
* நீட் முறைகேடு போராட்டம் வலுக்கிறது வினாத்தாள் கசிவுக்கு பாஜக, ஆர்எஸ்எஸ் காரணம்: ராகுல் பரபரப்பு குற்றச்சாட்டு
*பிரதமர் மோடி உளவியல் ரீதியாக உடைந்து போயிருக்கிறார். ஆட்சியை நடத்த முடியவில்லை என ராகுல் விமர்சனம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘நாங்கள் பொறுப்பேற்கிறோம்’: நீட், யுஜிசி-நெட் தேர்வில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க குழுவை கல்வி அமைச்சர் அறிவித்தார்.
* முதல் கோணல்: மூத்த உறுப்பினரை நியமிக்கும் முறையை உடைத்து, இடைக்கால மக்களவை தலைவராக பாஜகவின் பார்த்ருஹரி மஹ்தாப் நியமனம்.
* குஜராத் கடற்கரை போதைப்பொருள் மாபியா மய்யமாக உருவெடுத்துள்ளது; கைவிடப்பட்ட பாக்கெட்டுகளை எல்லையோர காவல் படை தொடர்ந்து மீட்டு வருகிறது
தி இந்து:
* பீகாரில் 65% இட ஒதுக்கீடு; பாட்னா உயர் நீதிமன்றம் ரத்து.
தி டெலிகிராப்:
* நீட்-2024: நான்கு விண்ணப்பதாரர்களுக்கான வினாத்தாள்களை ஏற்பாடு செய்ததாக குற்றம் சாட்டப் பட்டவர் ஒப்புக்கொண்டார்
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment