ஊற்றங்கரை, ஜூன் 21- கிருட்டின கிரி மாவட்டம் ஊற்றங்கரை ஒன்றியம் பனைமரத்துப்பட்டி கிராமத்தை சீரிய பகுத்தறிவாளர் சுயமரியாதைச் சுடரொளி ஊற்றங்கரை பகுதியின் தமிழ்ச் சங்கத்தின் தலைவருமான முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கீ.அ.கோபாலன் அவர்கள் கடந்த 09/06/2024 அன்று வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார்.
படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி ஊற்றங்கரை பனமரத்துப்பட்டி அவரது இல்லத்தில் 19-6-2024 புதன் கிழமை காலை 11.30 மணியளவில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமைக் கழக அமைப்பாளர் தருமபுரி ஊமை. செயரா மன் தலைமை வகித்து கோபாலன் அவர்களின் இயக்கப் பணிகளை நினைவுகூர்ந்து உரையாற்றினார். சுயமரியாதை சுடரொளி கோபாலன் அவர்களின் அன்பு மருமகனும் தி.மு.க. பருகூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளருமான பி.டி.அன்பரசன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சிக்கு கிருட்டினகிரி மாவட்டத் கழகத் தலைவர் கோ. திராவிடமணி, மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் தட்ரஅள்ளி த.அ.நாகராஜ், மேனாள் மண்டலத் தலைவர் பழ.வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர். கிருட்டினகிரி மாவட்ட தி.மு.க.செயலாளரும் பருகூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் சுயமரியாதை சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் கீ.அ.கோபாலன் அவர்களது படத்தினை திறந்து வைத்து மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி நினை வேந்தல் நிறைவுரையாற்றினார்.
நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்டத் கழகத் தலைவர் கே.சி.எழிலரசன், பகுத்தறிவாளர் கழக மாநில துணைப் பொதுச்செயலாளர் அண்ணா. சரவணன், ஊற்றங்கரை பேரூராட்சித் தலைவர் பா.அமானுல்லா, கிருட்டினகிரி மாவட்ட அதிமுக மேனாள் செயலாளரும் மேனாள் சட்ட மன்ற உறுப்பினருமான கிருட்டினகிரி முனி. வெங்கட்டப்பன் ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர்.
நிறைவாக கிருட்டினகிரி மாவட்ட கழகச் செயலாளர் செ.பொன்முடி நன்றியுரையாற்றினார்.
இறுதியாக அனைவரும் எழுந்து நின்று அய்ந்து மணி துளிகள் (அமைதி காத்து) மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் வ. ஆறுமுகம், திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் கலைவாணன், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் கே.சி.எ. சிற்றரசு, ஊற்றங்கரை ஒன்றியத் தலைவர் அண்ணா அப்பாசாமி, ஒன்றியச் செயலாளர் செ.சிவராஜ், மகளிரணி வெ. அழகுமணி, திமுக மாவட்ட துணைச் செயலாளர் மா. சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லாம், ஊற்றங்கரை ஒன்றிய செயலாளர்கள் எக்கூர் த.செல்வம், எஸ்.குமரேசன், நகர பொறுப்பாளர் பார்த்தீபன், நகர அவைத்தலைவர் தணிகை குமரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் லயோலா த.இராசசேகர், ஊராட்சி மன்ற தலைவர் சின்னதாய், சுமித்திரி, தவமணி, குப்புசாமி, கனகேஸ்வரி, கார்த்திக், செயசந்திரன், பாண்டியன் உள்ளிட்ட தி.மு.க.,தி.க., அ.தி.மு.க., காங்கிரஸ், மற்றும் பல்வேறு அமைப்புகளின் தோழர்கள், ஓய்வுபெற்ற அரசு அலுவலர் சங்க நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள் ஊற்றார், உறவினர்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
இறுதியாக சுயமரியாதை சுடரொளி கீ.அ.கோபாலன் அவர்களின் நினைவாக அவரது மருமகன் பி.டி. அன்பரசன் தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. செயராமனிடம் ஓர் ஆண்டு விடுதலை சந்தாவிற்கான தொகை ரூ2000/-த்தை வழங்கினார்.
குறிப்பு:- ஊற்றங்கரை பேரூராட்சித் தலைவர் பேசும்போது பேரூராட்சி சார் பில் தமிழ் சங்கத்திற்கு வழங்கப்பட்ட இடத்தில் தமிழ் சங்க கட்டிடத்திற்கு தமிழ் சங்கத்தை வளர்த்த அய்யா கோபாலன் நினைவை போற்றுகின்ற வகையில் அக்கட்டடத்திற்கு கோபா லன் நினைவு கட்டடம் என பெயர் வைக்கவேண்டும் என்று கூறினார்.