சென்னை,ஜூன்21- தமிழ்நாடு கலை இலக் கியப் பெருமன்றமும் ஒய்.எம்.சி.ஏ பட்டிமன்றமும் இணைந்து உலகத் தமிழாராய்ச்சி நிறு வனத்தின் பேராசிரியர் முனைவர் நா.சுலோசனா அவர்கள் எழுதிய ஆய்வு நூலான ‘திரைவானில் கலைஞர்’ என்னும் நூலின் திறனாய்வுக் கூட்டம் 18.6.2024 அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குத் தலைமையுரையாற்றிய செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மேனாள் பதிவாளர் பேராசிரியர் முனைவர் மு.முத்துவேல் அவர்கள் கலைஞருடைய திரைப் படம் மட்டுமா புதையல் – இந்நூல் திரைப்படங்கள் குறித்துப் பல அரிய தகவல்கள் அடங்கிய அறிவுப் பெட்டகமாக, புதையலாகத் திகழ்கிறது. நூலாசிரியரின் கடின மான தேடல் நூலின் ஒவ்வொரு பக்கத்தி லும் மிளிர்கிறது என்று நூலாசிரியரைப் பாராட் டினார்.
வரவேற்புரையாற் றிய மாநிலக் கல்லூரியி னுடைய தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் ப. தாம ரைக்கண்ணன் அவர்கள் நூலினுடைய சாராம்சத்தை எடுத்துக் கூறி வந்திருக்கும் அனை வரையும் வரவேற்றார்.
கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரிப் பேராசிரியர் சீனிவாசன் அவர்கள் நூல் குறித் துப் பேசுகையில், கலைஞ ருடைய இயற்பெயர் தட்சிணாமூர்த்தி என் பது கருணாநிதி ஆனது. அதற்குப் பிறகு தனித்தமிழ் இயக்கத்தவர்கள் கலைஞரிடம் ‘அருட் செல்வம்’ என்று மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொன்னதும் அதற்குக் கலைஞர் சொன்ன தகவல்கள் மேலும் ‘திரைவானில் கலைஞர்’ நூலில் கலைஞருடைய எழுத்தாற்றல் எவ்வளவு தூரம் ஆளுமை மிக்கதாக இருந்திருக்கிறது என்பது குறித்து தான் உணர்ந்ததை எடுத்துரைத்தார்.
நூலாசிரியர் பேரா. சுலோசனா, தமது ஏற் புரையில் இந்நூல் எழு தும்பொழுது கலைஞர் அவர்களின் திரையுலகப் பங்களிப்பு குறித்துத் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் திரைப்படங்களில் கலைஞரின் மொழியா ளுமை, கருத்தியல் கருவியாகத் திரைப் படத்தைக் கலைஞர் கையாண்ட விதம், நவீன திரையுலகின் சிற்பியாகக் கலைஞர் திரைப்படங்களை அமைத்த கலைநயம் என அனைத்தையும் பகிர்ந்து கொண்டார்.
கூட்டத்தை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்த சென்னை, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொறுப்பாளர் பேரா.முனைவர் க.இளங்கோ, பதிப்பகத்தார்கள், சிற்றிதழ் நடத்துவோர், தமிழார்வலர்கள் என வருகை புரிந்துச் சிறப்பித்த தோழமைகள் அனைவருக்கும் ஒய்.எம்.சி. பட்டிமன்றத்தின் இணைச் செயலாளர் புலவர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நன்றி கூறினார்.