‘நீட்’ தேர்வு எதிர்ப்பு போராட்டங்களுக்கு மாணவர்களுக்கு துணை நிற்பேன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

Viduthalai
3 Min Read

அரசு, தமிழ்நாடு

சென்னை, ஆக. 27- தஞ்சை வடக்கு, தெற்கு, மத்திய மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். 

பள்ளிக் கல்வித்துறை அமைச் சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, நாடாளுமன்ற உறுப் பினர்கள் எஸ்.எஸ்.பழனி மாணிக் கம். கல்யாணசுந்தரம், ராமலிங்கம், மாநில இளைஞரணி துணை செயலாளர் இளையராஜா ஆகி யோர் முன்னிலை வகித்தனர். 

மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முகில்வேந்தன் வரவேற்றார்.கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

மணிப்பூர் கலவரம்

பா.ஜ.க. அரசு இன்று நாட்டை சீரழித்துக்கொண்டு இருக்கிறது. இதற்கு உதாரணம் தான் மணிப்பூர் மாநிலம். 4 மாதங்களுக்கு மேலாக ஒரு மாநிலம் பற்றி எரிந்துக் கொண்டு இருக்கிறது. 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல வரத்தில் இறந்துள்ளனர். 

சர்ச்சுகள் இடிக்கப்பட் டுள்ளது. இது தொடர்பாக எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி யுள்ளனர். ஆனால், பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வரவே பயப்படுகிறார். அதையும் மீறி வந்த பிரதமர் மோடி இரண்டு மணி நேரம் பேசுகிறார். இதில் சுமார் 1லு மணி தி.மு.க., வையும், தலைவர் ஸ்டாலினையும் திட்டி பேசி விட்டு, வெறும் 5 நிமிடம் மட்டுமே தான் மணிப்பூர் பற்றி பேசி விட்டுச் சென்றார்.

தி.மு.க. ஆட்சி அமைந்தால் பயன்பெறப் போவது அவர்களின் குடும்பம் மட்டும் என்ற குற்றச் சாட்டை பிரதமர் மோடி நாடாளு மன்றத்தில் வைத்து பேசி வரு கிறார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களும் கலைஞர் குடும்பங்கள் தான். பா.ஜ.க ஆட்சிக்கு வந்த 9 ஆண்டு காலத்தில் பயன் பெற்றது அதானி, அம்பானி குடும்பம் தான். சாலை, மின்சாரம், விமான நிலையம், ரயில்வே ஆகியவற்றை அதானி கையில் பிரதமர் மோடி தூக்கிக்கொடுத்து விட்டார். இதைத் தான் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் சொல்ல முடியாமல், குறுக்கு வழி யில் அவரது பதவியை பறித்தனர்.

21 மாணவர்களை இழந்துள்ளோம்

‘நீட்’ தேர்வால் 21 மாணவர்களை இழந்துள்ளோம். ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய முழு முயற்சி மேற் கொண்டு வருகிறோம். ‘நீட்’ தேர் வுக்கு எதிராக அ.தி.மு.க.தான் போராட்டம் நடத்தியிருக்க வேண்டும்.

ஆனால், அந்தப் போராட்டத் தையும் தி.மு.க.தான் நடத்தியது. தலைவரிடம் அனுமதி பெற்று விரைவில் அடுத்த போராட்டம் நடத்தப்படும். நீட் தேர்வு ரத்தாகும் வரை தி.மு.க. இளைஞரணியின் போராட்டம் ஓயாது.

தி.மு.க. நடத்திய போராட்டத் துக்கு அ.தி.மு.க.வுக்கும் அழைப்பு விடுத்தோம். அதே நாளில் மதுரை யில் அ.தி.மு.க மாநாடு நடை பெற்றது. நீட் தேர்வு ரத்து உத்தர வாதத்தைக் கொடுத்தால் தான் பா.ஜ.க.வுடன் கூட்டணி என்கிற ஒரு தீர்மானத்தை அ.தி.மு.க.வால் போட முடியவில்லை.

தமிழ்நாட்டில் கடந்த 2021ஆம்  ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க.வை விரட்டினோம். 2024ஆ-ம் ஆண்டில் நடைபெற வுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வையும் விரட்டு வோம். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் சட்டமன்ற உறுப் பினர்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், நாடாளுமன்ற உறுப்பினர்அண்ணாதுரை, மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் ஆதிராஜேஷ், மாநகர அமைப் பாளர் வாசிம்ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் தஞ்சை வடக்கு மாவட்ட அமைப்பாளர் ராஜா நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *