இலட்சியச் சொல் ஆகும். எப்படியாவது ஆரியக் கட்டுப்பாட்டால் நமக்கு ஏற்பட்டிருக்கிற கொடுமையான இழிநிலை, முட்டுக்கட்டை நிலைமாறி மேன்மை அடையவேண்டும். ஆரியம் என்றால் மாற்றத்திற்கு இடமில்லாதது; திராவிடம் என்றால் மாற்றிக் கொள்ள இடமளிப்பது என்பதுதான் உண்மைத் தத்துவமாகும்.
உலகத்திலேயே ஓர் அருமையான நல்ல நாடு நம் தமிழ்நாடு. ஏராளமான இயற்கை வசதிகள் படைத்த நாடு; வளப்பமுடைய நாடு. தமிழர்கள் சிறப்புடன் விளங்கியவர்கள். நாம் ஏன் இமயமலை ஓரத்திலிருக்கும் காட்டுமிராண்டிகள் போல் ஆக்கப்பட்டு விட்டோம். சிந்திக்க வேண்டாமா?
மொழி என்பது ஒரு மனிதனுக்கு அவ்வளவு முக்கியமான சாதனம் அல்ல; அது இயற்கையானதும் அல்ல. அதற்கு ஒரு கட்டாயமும் தேவையில்லை. மொழி மனிதனுக்குக் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் அளவுக்குத் தேவை யானதே ஒழிய பற்றுக் கொள்வதற்கு அவசியமானது அல்ல. மொழியானது சமுதாயத்தில் உள்ள சூழ்நிலைக்கு ஏற்றதே ஒழியப் பொதுவாழ்வுக்கு, உணர்ச்சிக்கு ஏற்றது அல்ல.
– தந்தை பெரியார்