தஞ்சை, ஜூன் 20- நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி தி.மு.க சார்பில் தஞ்சை தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்ற ச.முரசொலி 18.06.2024 அன்று மாலை 5.30 மணிக்கு தஞ்சாவூர் கீழராஜவீதி பெரியார் இல்லத்திற்கு வருகை தந்து மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா. ஜெயக்குமார் இரா.குணசேகரன், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், காப்பாளர் மு.அய்யனார், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, பகுத்தறிவாளர் கழக ஊடகப்பிரிவு மாநில தலைவர் மா.அழகிரிசாமி,பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோபு.பழனிவேல், தஞ்சை மாநகர செயலாளர் செ.தமிழ்ச்செல்வன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் ச. அழகிரி, மாநகர இணைச் செயலாளர் இரா.வீரகுமார், தஞ்சை மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன், திருவையாறு ஒன்றியத்தலைவர் ச.கண்ணன், பகுதி கழகப் பொறுப்பாளர்கள் துரை.சூரியமூர்தி, விஜயன், கரந்தை தனபால். ஓய்வு பெற்ற மாவட்டத் துணை ஆட்சியர் ஜெயராமன், பேராசிரியர் குட்டிமணி,திருவையாறு கவுதமன், குடும்ப விளக்கு வேணுகோபால், போட்டோ மூர்த்தி, வழக்குரைஞர் பூவை.புலிகேசி, பெரியார் சமூக காப்பு அணி இயக்குநர் தே.பொய்யாமொழி, அ.பெரியார் செல்வன் உள்ளிட்ட கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களை சந்தித்து அனைவருக்கும் பயனாடை அணிவித்து நன்றி தெரிவித்தார்.
வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்களுக்கு கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
91 வயதிலும் தஞ்சை தொகுதியில் இரண்டு இடத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும், தேர்தல் களப்பணியாற்றிய திராவிடர் கழக பொறுப்பாளர்களுக்கும் மற்றும் தோழர்களுக்கும் முரசொலி நன்றி தெரிவித்து உரையாற்றினார்.