கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

Viduthalai
1 Min Read

20.6.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை
* நீட் முறைகேடு – ஜூன் 24இல் திமுக மாணவர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்.
* நாடாளுமன்றத்திற்கு சென்ற திமுக எம்.பி.எம்.எம்.அப்துல்லாவை மறித்து கேள்வி கேட்ட சிஅய்எஸ்எப் அதிகாரி: மாநிலங்களவைத் தலைவரிடம் புகார்
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
* மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப் பேற்றிருக்கும் மோடிக்கு சவால்கள் அதிகம் உள்ளன. முன்பு போல் தன்னிச்சையாக செயல்படுவது கடினம் என்கிறார் கட்டுரையாளர் சுனில் கடாடே.
* நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் துணை பேராசிரியர் பணி மற்றும் ஜுனியர் ரிசர்ஜ் பெல்லோஷிப் பெறுவதற்காக நடத்தப்பட்டும் யுஜிஜி நெட் தேர்வு திடீர் ரத்து. ஒன்றிய கல்வி அமைச்சகம் திடீர் அறிவிப்பு.சிபிஅய் விசாரணைக்கு ஆணை – ஒன்பது லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் இந்த திடீர் ஆணை.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
* மகாராட்டிராவில், ஷிண்டே – அஜித் பவார் அணிகளுக்கு இடையே விரிசல் அதிகரிப்பு; தேர்தல் தோல்வி எதிரொலி. பாஜக அதிருப்தி.
* நீட் தேர்வுக்கு எதிராக நாளை மறுநாள் காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டம்: கே.சி.வேணுகோபால் அறிவிப்பு
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
* நாடாளுமன்ற வளாகத்தில் காந்தியார், அம்பேத்கர் சிலைகளை அப்புறப்படுத்தியதற்கு கண்டனம். மீண்டும் அதே இடத்தில் இடமாற்றம் செய்ய வேண்டும், மக்களவை, மாநிலங்களவை தலைவர்களுக்கு மல்லிகார்ஜூன கார்கே கடிதம்.
– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *