நம்மைப் போன்ற எல்லாக் குணமும், உணர்ச்சியும், நடப்பும் உள்ள மனிதனைக் கடவுள் என்கின்றோம். கடவுள் அவதாரம் என்றும் சொல்லுகின்றோம். அதற்கு ஆதாரங்கள் வேறு தேடி, அதற்கு அற்புதங்கள் கற்பித்து நாம் காட்டுமிராண்டிகள் ஆவதோடு மற்ற மக்களையும் காட்டுமிராண்டிகளாக ஆக்குகின்றோம். இது எதற்கு? பாமர மக்களை ஏய்ப்பதற்குத்தானே! இந்தக் குணம் காட்டுமிராண்டித் தன்மை உடையதா? இல்லையா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’