சென்னை, ஜூன் 20 பிரதமர் மோடி 3ஆம் முறை ஆட்சி அமைத்து 2 வாரம் ஆகியும் கூட இன்னமும் அவரால் மிக முக்கியமான ஒரு முடிவை எடுக்க முடியாத சூழல் உள்ளது.
ஜூன் 26ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன்னதாக ஜூன் 24-ஆம் தேதி தொடங்கும் 18ஆவது மக்களவையின் முதல் அமர்வின் போது, மக்களவைத் தலைவர் ஒருமனதாக தேர்ந்தெ டுக்கப்படுவதை உறுதி செய்ய பாஜக என்டிஏ கூட்டணி கட்சிகளை அணுகும். பாஜக வின் முன்மொழிவுக்கு என்டிஏ கூட்டணி கட்சிகள் சம்மதித்தால், தேர்தல் நடத்த வேண்டிய அவசியமில்லை. இல்லையென்றால் தேர்தல் நடத்த வேண்டி இருக்கும்.
இந்த ஒரு விவகா ரத்தில் மட்டும் பாஜகவிற்கு விட்டுக்கொடுக்க நாயுடு விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் இருவரும் பாஜக கூட்டணியில் நாடாளுமன்ற மக்களவை மக்களவைத் தலைவர் பதவியை பெறுவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். பாஜகவிற்கு தனிப்பட்ட மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் ஏற்கெ னவே கூட்டணி கட்சிகளுக்கு 18 அமைச்சரவை பதவிகளாக வழங்கப்பட்டு உள்ளன
இந்த நிலையில் லோக்சபா யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மக்களவை தலைவர் பதவியை தேர்வு செய்வது கடினமானது. மக்களவைத் தலைவர் பதவி கட்சி சார்பற்றதாக இருக்க வேண்டும். அதே சமயம் மைனா ரிட்டி அரசு அமையும் போது, கூட்டணி ஆட்சியின் போது ஆட்சி எப்போது வேண்டு மானாலும் கவிழும் அபாயம் உள்ளது.
முக்கியமாக நம்பிக்கை யில்லாத் தீர்மானம், குதிரை பேரம், மக்களவை உறுப்பினர்கள் தகுதி நீக்கம் போன்ற சம்பவங்கள் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் மக்களவைத் தலைவர் பதவி முக்கியமானதாக மாறும்.
இப்படிப்பட்ட நிலையில்தான் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் இருவரும் மக்களவைத் தலைவர் பதவியை பாஜக கூட்டணியில் பெறுவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். இரண்டு பேருமே மக்களவைத் தலைவர் பதவியை தங்களுக்கான முக்கியமானதாக பார்க்கின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில் பாஜக பல மாநில அரசுகளை கவிழ்த்து உள்ளது. பல மாநில கட்சிகளின் மக்களவை உறுப்பினர்கள் அணி மாறுவதற்கு பாஜக உதவியாக இருந்துள்ளது. பல கட்சிகளை உடைத்தும் உள்ளது.
இந்த நிலையில் நாடாளு மன்ற உறுப்பினர்கள் கொறடா உத்தரவை மீறி மாற்று கட்சிக்கு வாக்களிக்கும் போது அவர்களை தகுதி நீக்கும் செய்யும் அதிகாரம் மக்களவைத் தலைவரருக்கே இருக்கும். இதில் நீதிமன்றம்கூட தலையிட முடியாது. உதா ரணமாக எதிர்காலத்தில் பாஜக ஆட்சிக்கான ஆதரவை தெலுங்கு தேசம் விலக்கிக் கொள்கிறது என்று வைத்துக்கொள்வோம்.
அப்போது தெலுங்கு தேசம் மக்களவை உறுப்பினர்கள் பாஜக பிரித்து தங்கள் பக்கம் இழுக்கலாம். இதனால் தெலுங்கு தேசம் மக்களவை உறுப்பினர்கள் கொறடா உத்தரவை மீறி பாஜகவிற்கு வாக்களிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
அப்படிப்பட்ட நேரத்தில் தெலுங்கு தேசத்து உறுப்பினர் சபாநாயகராக இருந்தால்.. அவர் அணி மாறி வாக்களிக்கும் உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய முடியும். அதுவே பாஜக எம்பியாக இருந்தால்.. தெலுங்கு தேசம் உறுப்பினராக தகுதி நீக்கம் செய்து அணி மாறும் உறுப்பி னர்களுக்கு ஆதரவாக கூட செயல்படுவார். இதேதான் நிதிஷ் குமார் கட்சியிலும். இதன் காரண மாகவே சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் இருவரும் சபாநாயகர் பதவியை பாஜக கூட்டணியில் பெறுவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். இதனால் இரண்டு பேருமே மக்களவைத் தலைவர் பதவி வேண்டும் என்று உறுதியாக வலியுறுத்ததுகின்றனர். என்ன நடந்தாலும் எங்களுக்கு மக்களவைத் தலைவர் பதவி வேண்டும் என்று உறுதியாக கேட்டு இருக்கின்றனர்.
பெரிய அமைச்சரவை எல்லாம் நாங்கள் கேட்க வில்லை.. அதனால் எங்களுக்கு மக்களவைத் தலைவர் பதவி வேண்டும் என முக்கியமாக சந்திரபாபு நாயுடு உறுதியாக இருக்கிறாராம்.