வாகன தொழிற்சாலையில் பயிற்சிப் பணி

viduthalai
1 Min Read

சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் ‘அப்ரென்டிஸ்’ பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அய்.டி.அய்., (அனுபவம்) பிரிவில்பிட்டர் 45, மெஷினிஸ்ட் 43, பெயின்டர் 5, வெல்டர் 20, அய்.டி.அய்., அல்லாத பிரிவில் பிட்டர் 32, மெஷினிஸ்ட் 36, வெல்டர் 24, எலக்ட்ரீசியன் 38, எலக்ட்ரானிக் மெக்கானிக் 10 என மொத்தம் 253 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: அய்.டி.அய்., அல்லாத பிரிவுக்கு பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது: 22.6.2024 அடிப்படையில் 15 – 24 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
முகவரி: The chief general manager, Heavy vehicles factory, Avadi, Chennai – 600 054.
கடைசி நாள்: 22.6.2024 மாலை 4:45 மணி.
விவரங்களுக்கு: avnl.co.in

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *