மதிப்பிற்குரிய ராகுல் அவர்களுக்கு,
தங்களது பிறந்த நாளில் (ஜூன் 19) எங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த ஆண்டு பிறந்த நாள், தங்களின் கடும் உழைப்பால் இந்தியா கூட்டணியின் வெற்றியைக் காண்கிறது. சமூகநீதித் தளத்தில் தாங்கள் கவனம் செலுத்தியது வெற்றிக்கான காரணங்களில் முக்கியமானது.
தாங்கள் மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு குறித்து வெளிப்படுத்திய கருத்து வெல்லட்டும்!
தங்களின் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைத்திட, வாழ்த்தி மகிழ்கிறோம்!
அன்புடன்,
– கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்