கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 19.6.2024

viduthalai
1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமல் நிறை வேற்றப்பட்ட குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வையுங்கள்,

ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

* நீட் தேர்வு வினாத்தாள் கசிவுகளின் மொத்த கூடாரமாக பாஜக ஆளும் மாநிலங்கள் உள்ளன, ராகுல் கடும்

குற்றச்சாட்டு.

*நீட் தேர்வு நடத்துவதில் 0.001 சதவீதம் அளவுக்கு கூட அலட்சியமாக இருக்கக் கூடாது. இந்த தேர்வில் சிறு தவறு நடந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

*ஆட்டம் ஆரம்பம்; கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம், ஜன சேனா கட்சிகளில் வாய்ப்பு கிட்டாமல் ஏங்கித் தவிக்கும் தலைவர்களை இழுக்க பாஜக முயற்சி.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* 600க்கும் மேற்பட்ட அகமதாபாத் பள்ளிகளில் காலை அசெம்பிளியில் கீதை பாடம் கட்டாயம். இத்திட்டத்தின் கீழ் 3,000 ஆசிரியர்களுக்கு பயிற்சி இந்த வாரம் தொடங்க உள்ளது. குஜராத் பாஜக அரசு உத்தரவு.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *