ஜாதி மறுப்பு திருமணங்களுக்கு பாதுகாப்பு அளிக்க சட்டம் இயற்றி நாட்டுக்கே வழிகாட்ட வேண்டும்!

viduthalai
3 Min Read

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

திருநெல்வேலி, ஜூன் 19- ஜாதி மறுப்புத் திருமணங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் ஆணவக் கொலைகளைத் தடுக்கவும் நீதி மன்றமே முன்வைத்துள்ள சட்டமுன் வடிவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறை வேற்றி இந்தியாவுக்கே முன்னுதாரண மாகத் திகழ வேண்டும் என்றும், ஜாதியை வைத்து அரசியல் செய்வதை தடுக்கவும், ஜாதிவெறியூட்டும் அமைப்புகளை தடை செய்யவும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது

சிபிஎம் அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்

திருநெல்வேலியில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட புது மண இணையருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளித் துப் பாது காத்தது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் சிலர் கூலிப் படையினருடன் வந்து கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தையும் ஊழியர் களையும் தாக்கினர். இதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 17.6.2024 அன்று மாலை திருநெல்வேலியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை திருநெல் வேலி மாவட்டக்குழு அலுவ லகத்தில் சந்தித்துப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சமூக விரோத – ஜாதிய சக்திகளின் அராஜக த்தை அனுமதிக்க முடியாது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலு வலகம் தாக்கப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடக்கின்றன. இவற்றில் பல்வேறு அர சியல் கட்சியினர் பங்கேற்று, இது போன்ற தாக்குதல்களை அனுமதிக்க முடியாது என கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது போன்ற தாக்குதல்களை நடத்த சமூக விரோத – ஜாதிய சக்திகளை அனுமதிக்க கூடாது. மாநிலம் முழுவதும் அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசும் காவல் துறையும் முன்வர வேண்டும்.

குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக அடிக்கடி ஜாதிவெறி படுகொலைகள் நடப் பது தொடர்கதையாக உள்ளது.

திருமண வயதை எட்டிய வர்கள் யாரை திருமணம் செய்துகொள்வது என்பது அவர்களது தனியுரிமை. அது சட்டம் அளித்திருக்கும் உரிமை. 90 சதவிகித திருமணங்கள் பெற்றோர் விருப்பத்தின்படியே நடக்கின்றன. ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்வோரை கட்டுப்படுத்துவதும் தடுப்ப தும் படுகொலை செய்வதும் மிகச் சாதாரணமாக நடக்கிறது. தமிழகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் ஆணவக்கொலைகள்

ஜாதி ஆணவப் படு கொலை கள் அதிகமாக நடக்கும் மாநிலம் என்கிற அவப்பெயருக்கு தமிழ் நாடு உள்ளாகி இருக்கிறது. இதுபோன்ற செயல் களை அனுமதிப்பது தமிழ்நாட்டுக்கு அழகல்ல. பாரதியார், வ.உ.சி, வைகுண்டர் போன்ற சாதி மறுப்புத் தலைவர்கள் பிறந்திருக்கும் இந்த மண்ணில் சாதியின் பெயரால் படுகொ லைகள் நடக்கின்றன. இத்தகைய ஜாதிக் கொடுமைகள் நடப்பதை அனுமதிக்க முடியாது. இந்த சம்பவத்தை ஒரு படிப்பினையாக ஏற்றுக்கொண்டு அரசியல் கட்சிகளும் சமூகத்தில் இருக்கும் அமைப்புகளும் பொதுமக்களும் செயல்பட வேண்டும். இதில் அரசும் தீவிரமாக செயல்பட வேண்டும். ஜாதி மறுப்புத் தம்பதிகளுக்கு என்றென்றும் துணை நிற்போம் ஜாதி மறுப்புத் திருமணத்தை ஆதரித்ததற்காக எங்கள் மீது சிலர் கடுமை யான விமர்சனத்தை முன் வைக்கின்றனர். நாங்கள் யாரை யும் கடத்திச் சென்று திருமணம் செய்து வைக்கவில்லை. சட்டம் அளித்துள்ள உரிமையை பயன்படுத்தி திருமணம் செய்துகொண்டவர்கள் பாதுகாப்புக்காக எங்களை நாடி வருகின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறோம். இது எங்களது கடமை. இன்று மட்டுமல்ல, என்றென்றைக்கும் இதைச் செய்வோம். இது போன்று திருமணம் செய்துகொ ண்டு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நபர்களுக்கு பாதுகாவலராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திகழும். இத்தகைய இணையருக்கு அரசு பாதுகாப்பு அளிக்கவேண்டும். பெற்றோர்களால் புறக்கணிக்கப் பட்டிருக்கும் இவர்களுக்கு வேலையும் வீடும் அரசு கொடுக்க வேண்டும். அவர்கள் வாழ்வதற்கு வருவாய் உள்ளிட்ட தேவைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.

தமிழ்நாடு அரசை வலியு றுத்தி கேட்டுக்கொள்வது என்னவென்றால், ஆணவக் கொலைக்கு எதிராக நீதி மன்றமே முன்வைத்துள்ள சட்டமுன் வடிவை சட்டமாக நிறைவேற்ற வேண்டும். காதல் திருமணத் இணையரை பாதுகாப்பற்கான தெளிவான வழிகாட்டுதலை உச்ச நீதி மன்றம் வழங்கி உள்ளது. அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் அந்த பரிந்துரைகளை உச்சநீதிமன்றம் அனுப்பி உள்ளது. எல்லாவற்றிலும் முன்னணியில் இருக்கும் தமிழ்நாடு, ஜாதி மறுப்புத் திருமணங்களை பாதுகாக்கவும், ஆணவப் படுகொலைகளைத் தடுக்கவும் இந்தி யாவுக்கே முன்னுதாரணமாக தமிழக சட்டமன்றம் அந்தச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதை வலியுறுத்தும். இதர கட்சிகளுடன் ஒத்த கருத்தை உருவாக்க முயற்சிக்கும். இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *