18.6.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* குஜராத் கோத்ராவில் 2002இல் நடைபெற்ற கலவரம் பற்றிய குறிப்புகளை பாடப்புத்தகங்களில் இருந்து என்.சி.இ.ஆர்.டி. நீக்கம்.
* அருந்ததி ராய் மீது ‘உபா’ சட்டத்தில் நடவடிக் கையா? சிவில் சமூகம் கடும் எதிர்ப்பு.
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
*வயநாடு தொகுதி எம்பி பதவியிலிருந்து விலகுகிறார் ராகுல் காந்தி! இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி.
* மக்களவை தலைவர் பதவியை பாஜக தக்க வைக்க முடிவு. கூட்டணிக் கட்சிகளுக்கு கிடையாது.
* பாடப்புத்தகங்களில் நாட்டின் பெயரை குறிப்பிட இந்தியா, பாரதம் என்ற 2 வார்த்தைகளும் பயன்படுத்தப்படும்: என்சிஇஆர்டி தலைவர் தகவல்
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* “யாதவர்கள், முஸ்லிம்கள் எனக்கு வாக்களிக்க வில்லை. அவர்களுக்கு எந்த உதவியையும் செய்ய போவதில்லை!” பாஜக கூட்டணியில் உள்ள ஜேடியு எம்பி தேவேஷ் சந்த்ரா தாகூர் சர்ச்சை பேச்சு. பாஜக கண்டனம்..
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment