கழகத் தோழர்கள் பங்கேற்பு!
திருநெல்வேலி, ஜூன் 18- ஜாதி மறுப்பு திருமணத்தை ஆதரித்ததற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலு வலகத்தையும்,தோழர்களையும் தாக்கிய ஜாதி வெறியர்கள் கண்டித்து 17.6.2024 அன்று மாலை6 மணிக்கு பாளையங்கோட்டை லூர்துநாதன் சிலையருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சிறீராம் வரவேற்றார்.
மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் தொடக்கவுரையாற்றினார். திமுக தொழிற்சங்கத்தலைவர் தர்மன், மதிமுக, மாவட்டச் செயலாளர் நிஜாம், காங்கிரஸ்மாவட்டத்தலைவர் சங்கரபாண்டியன், சிபிஅய் மாவட்டச்செயலாளர் சடையப்பன், விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை.திருவள்ளுவன், திராவிட தமிழர் கட்சி மாநிலத்தலைவர் வெண்மணி, ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன் ஆகியோர் பங்கேற்று கண்டனவுரையாற்றினார்கள்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தல்படி மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
நிறைவாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தே.பாலகிருட்டிணன் கண்டன உரை நிகழ்த்தினார்.
திராவிடர் கழக மாவட்டத்தலைவர் ச.இராசேந்திரன், மாவட்டச் செயலாளர் இரா.வேல்முருகன், காப்பாளர் இரா.காசி, மாநில திராவிட மாணவர் கழக துணைச்செயலாளர் சு.இனியன், மாவட்ட ப.க.தலைவர் செ.சந்திரசேகரன், பாளை பகுதி செயலாளர் பா.பாலகிருட்டிணன், தச்சை பகுதிசெயலாளர் மாரிகணேசு, மாநகர ப.க.துணைச்செயலாளர் சந்திப்பு நடராசன், ப.க.செயற்குழுஉறுப்பினர் சந்தர்ராசு, மாவட்ட திராவிட மாணவர்கழக தலைவர் செ.சூரியா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அயன்சிங்கம்பட்டி எஸ்.பிரபாகரன் ஆகியோர் பங்கேற்று முழக்கமிட்டார்கள்.