இ.வி.எம்.இயந்திரங்களின் செயல்பாடுகள் – தேர்தல் ஆணையம் விவாதிக்க வேண்டும்! தி.மு.க. வழக்குரைஞர் அணி தீர்மானம்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜூன் 18- சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக சட்டத்துறை அலுவலகத்தில் திமுக வழக்குரைஞர் அணி மாநில நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் நேற்று நடந்தது.

சட்டத்துறைச் செயலா ளர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ (நாடாளுமன்ற உறுப்பினர்) தலைமை தாங்கினார். சட்டத் துறைத் தலைவர் மூத்த வழக்குரைஞர் இரா.விடுதலை முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், சட்டத்துறை இணைச் செயலாளர்கள் கே.எஸ்.ரவிச்சந்திரன், ஈரோடு ராதாகிருஷ்ணன், கே.எம்.தண்டபாணி, துணைச் செயலாளர்கள் ஜெ.பச் சையப்பன், கே.சந்துரு, வி.வைத் தியலிங்கம், தலைமைக் கழக வழக்குரைஞர்கள் ப.கணேசன், சூர்யா வெற்றி கொண்டான், கே.ஜெ.சரவ ணன், வீ.கவிகணேசன் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், இந்திய துணைக் கண்டமே வியந்து நோக்கும் வண்ணம் தமிழ்நாட்டில் உள்ள 40 தொகுதிகளிலும் “இந்தியா கூட்டணி” வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத் தில் மாபெரும் வெற்றிபெற வியூகம் அமைத்ததோடு, வெற்றிக்கு பாடுபட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும்- பாசிச பா.ஜ. மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை படுதோல்வி அடையச் செய்து, இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்திட, பாடுபட்ட திமுக இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கூட்டம் மனமார்ந்த பாராட்டுதலையும், நன்றி யையும் தெரிவித்துக் கொள் கிறது.

நடந்து முடிந்த நாடா ளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட இவிஎம் இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து இன்று நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியி ருக்கிறது.

இச்சூழ்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் இவிஎம் செயல்பாடுகள் குறித்து, பொதுவெளியில் விவாதிக்க வேண்டும். அண்மையில் நடந்த நீட் தேர்வு குளறுபடிகளுக்கு கண்டனத்தை பதிவு செய்வதோடு, நீட் நுழைவுத் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலில், திமுக நிர்வாகிகளுக்கு உறுதுணையாக இருப்ப துடன், அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து சட்ட உதவிகளை வழங்கி, சிறப்பாக செயல்பட வேண்டும்.

மாவட்ட அமைப்பாளர் களின் கூட்டம் வருகிற ஜூலை 21ஆம் தேதி நடத்துவது உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *