தூக்கத்தில் குறட்டை விடுவதால் சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், தைராய்டு, மாரடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக தூக்கத் தடை பாதிப்புகளுக்கான இந்திய அறுவை சிகிச்சை நிபுணா்கள் கூட்டமைப்பின் (அய்ஏஎஸ்எஸ்ஏ) தலைவா் மருத்துவர் ப.விஜயகிருஷ்ணன் தெரிவித்தாா்.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆழ்ந்த உறக்கம் அவசியம். தடையற்ற உறக்கம் உடலில் பல்வேறு நன்மை களை ஏற்படுத்தும். நம்மில் பலா் தூக்கத்தின்போது குறட்டை விடு வதை பெரிய பிரச்சினையாக எடுத்துக் கொள்வதில்லை.
உண்மையில், அது உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய ஒன்று. உடலில் அகச்சுரப்பிகள் முறையாக செயல்படுவதற்கும், உடல் உறுப்புகள் முறையாக இயங்குவதற்கும் ஆக் சிஜன் இன்றியமையாதது.
சுவாசப் பாதையில் சதை வளா்ச்சி, தசைகள் தளர்வு, உடல் பருமன் போன்ற காரணங்களால் தூக்கத்தில் சரியாக சுவாசிக்க முடியாது.
எனவே, அப்போது குறட்டை வருகிறது. அவ்வாறு சுவாசிக்க இயலாமல் உடலில் ஆக்சிஜன் குறையும்போது அகச்சுரப்பிகளில் பாதிப்பு ஏற்பட்டு சா்க்கரை நோய், தைராய்டு பிரச்சினைகள் வரலாம். அதேபோல, மாரடைப்பு, உயா் ரத்த அழுத்தத்துக்கும் அவை வழிவகுக்கின்றன.எனவே, குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை அனைவ ரும் குறட்டை பாதிப்பை அலட் சியப்படுத்தாமல் உரிய நேரத்தில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
இதுதொடர்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மெட்ராஸ் காது-மூக்கு-தொண்டை ஆராய்ச்சி மய்யத்தில், இந்த மாதம் முழுவதும் பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும் என்றாா் அவா்.