கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

Viduthalai
1 Min Read

17.6.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஒன்றியத்தில் வலுவான கூட்டணி அரசு இருப்பதால், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் – ஒன்றிய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் என கொக்கரிப்பு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்வது சாத்தியம்தான் என்ற எலான் மஸ்க் கூறிய கருத்துக்கு, யாரையும் ஆய்வு செய்ய அனுமதிக்கப்படாத மின்னணு வாக்கு இயந்திரங்கள் இந்தியாவின் கருப்பு பெட்டிகளாக இருக்கின்றன என ராகுல் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு.
* நம்புங்கள்! மாணவர்களின் மனதை புண்படுத்தும் வகையில், சமூகத்தில் வெறுப்பை உண்டாக்கும் வகையில் அல்லது வெறுப்புக்கு ஆளாகும் வகையில் கற்பிக்கப்பட கூடாது என்பதற்காகத்தான் பாடத்திட்டத்தில் வரலாறு பற்றி திருத்தங்கள் மேற்கொண்டதாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (என்சிஇஆர்டி) இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி ‘சாமர்த்தியமான’ விளக்கம்.
தி டெலிகிராப்:
* நாட்டின் சொத்துக்களில் ஓபிசி பிரிவினர் பங்கு குறைந்து வருவதையும், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வீழ்ச்சியையும், ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளால் விவசாயிகள் கச்சா ஒப்பந்தத்தைப் பெறுவதையும் வெளியிட்ட உலக சமத்துவமின்மை குறித்த அறிக்கையை எடுத்துக்காட்டி பாஜக மீது லாலு பிரசாத் தாக்கு.
*நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் ஒன்றிய மாணவர்களின் கோரிக்கைகளை ஆதரிக்க டில்லி கல்வி அமைச்சர் பரத்வாஜ் வேண்டுகோள்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* நீட் தேர்வு மோசடிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் போராட்டம் வலுக்கிறது.
* தமிழ்நாடு இடைத்தேர்தலில் பாஜகவும். அதிமுகவும் ‘ப்ராக்ஸி’ மூலம் போராடுகின்றன என்று சிதம்பரம் சாடல்.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *