இதற்குப் பெயர்தான் பக்தி வேஷம்! மண்டை ஓடுகளுடன் நானே கடவுள் என்ற ஆசாமி

2 Min Read

திருவண்ணாமலை, ஜூன் 17- ‘நானே கடவுள்’ என்று கூறி மண்டை ஓடுகளுடன் ஆடைகளைக் களைந்த படி காவல் நிலையம் சென்ற அகோரி!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், முழு நிலவு உள்ளிட்ட விசேட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து அண்ணாமலையாரை வழிபட்டு கிரிவலம் மேற் கொள்வது வழக்கமாம்!
அதேபோல், திருவண்ணாமலை நகரம், மாட வீதி, கிரிவலப் பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாதுக்கள் தங்கி உள்ளனர்.

இந்த நிலையில், தேரடி வீதியில், முருகர் தேர் பக்கத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பல்வேறு மண்டை ஓடுகளுடன் கூடிய கார் நிறுத்தப்பட்டிருந்தது. போக்குவரத்து விதிகளை மீறும் வகையில் வாகன எண் இருக்கும் இடத்தில் அகோரி நாகசாது என்ற பெயர் பலகையுடன் நீண்ட நேரமாக கார் நின்றிருந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் காரின் அருகில் சென்று காருக்குள் என்ன இருக்கிறது என்பதை ஆராய்ந்து கொண்டிருந்த நிலையில், காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த காவல் துறையினர் காரில் பல்வேறு மண்டை ஓடுகள் இருந்ததுடன், பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் பல்வேறு ஒளிப்படங்களும், பெண்களை முகம் சுளிக்க வைக்கும் ஒளிப்படமும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், காரில் இருந்த அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டனர். இதைத் தொடர்ந்து 1 மணி நேரம் கழித்து வந்த காரின் உரிமையாளர், கழுத்து நிறைய ருத் ராட்ச கொட்டையும், நெற்றி நிறைய விபூதி பட்டையுடன் அகோ ரியை போன்று இருந்தார்.
இதைத் தொடர்ந்து அவரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்குள் அழைத்துச் செல்ல முயற்சித்தனர்.

அப்போது அவர், என் பெயர் கடவுள். நானே சிவன், பிரம்மா, விஷ்ணு எனக் கூறி உடலில் உள்ள ஆடைகளை களைந்து காவல் நிலையத்திற்குள் சென்றதால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், அவரை காருக்குள்ளேயே வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் ரிஷிகேஷ் பகுதியில் இருந்து திரு வண்ணாமலைக்கு வந்த தாகவும், கார் நிறுத்தும் இடம் ஏதும் இல்லாததால் சாலையிலேயே நிறுத்திவிட்டு கோவிலுக்கு சென்றதாகவும் கூறினார்.
இதையடுத்து போக்குவரத்து விதி களை மீறியதாகவும், பொதுமக்களை அச்சு றுத்தியதாகவும் அகோரி மீது வழக்குப் பதிவு செய்யாமல் ரூபாய் 3000 அபராதம் பெற்றுக் கொண்டு அவரை அனுப்பி வைத் தனர். இந்த நிகழ்வு திரு வண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *