காவேரிப்பட்டணம், ஜூன் 17- கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட் டணம் ஒன்றியத் திரா விடர் கழக மேனாள் தலை வரும், 1996-ஆம் ஆண்டு 69% இட ஒதுக்கீட்டுக்கான நீதிபதிகள் கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்று கைதாகி 19 நாட்கள் சேலம் மத் திய சிறைசாலையில் இருந்தவர், அனைத்துச் ஜாதியினர் அர்ச்சகர் உரிமைப் போராட்டம் உள்பட கழகம் நடத் திய பல்வேறு போராட் டங்களில் பங்கேற்று சிறை சென்றவர், சிறிதுகாலம் திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்தில் இருந்தவருமான காவேரிப்பட்டணம் புலியாண்டூர் பெரியார் பெருந்தொண்டர் மு.இராமசாமி (80 வயது) மேனாள் ஒன்றிய தலைவர் வயது முதிர்வு காரணமாக தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பாப்பாரப்பட்டி அடுத்த ஆலமரத்துப்பட்டி அருகே உள்ள சஞ்ஜிவ்ராயன் பள்ளம் கிராமத்திலுள்ள அவரது சின்ன மகள் இரா. கனிமொழி இல்லத்தில் 13.06.2024 இரவு 8.00 மணியளவில் இயற்கை எய்தினார். அன்னாரது மறைவு செய்தி அறிவிக்க வருந்துகிறோம்.
14.06.2024 காலை 10.00 மணியளவில் அவரது மறைவு செய்தி அறிந்து கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் கோ. திராவிடமணி தலைமையில் காவேரிப் பட்டணம் ஒன்றியத் தலைவர் பெ.செல்வம், ஒன்றியச் செயலாளர் பெ.செல்வேந்திரன், மாவட்ட விவசாய அணித் தலைவர் இல. ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பூ. இராசேந்திரபாபு, தருமபுரி மாவட்ட கழக மேனாள் தலைவர் பாப்பாரப்பட்டி இ. மாதன், விடுதலை வாசகர் வட்டத் தலை வர் க.சின்னராஜ், பாப்பாரப்பட்டி நகரத் தலைவர் மா. சுந்தரம், விடுதலை வாசகர் நரச்சிம்மன் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் கலந்துக் கொண்டு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். மதியம் 1.00 மணியளவில் அன்னாரது உடல் ஆலமரத்துப்பட்டி அருகேயுள்ள சஞ்ஜிவ் ராயன் பள்ளம் கிரா மத்தில் அடக்கம் செய்யப் பட்டது.